Thursday, June 1, 2023
Homeசெய்திகள்எல்லாம் எடப்பாடி செஞ்ச தப்பு.. ஈரோடு கிழக்கால் அப்செட் ஆன அதிமுக மாஜிக்கள்.. என்னாச்சு?

எல்லாம் எடப்பாடி செஞ்ச தப்பு.. ஈரோடு கிழக்கால் அப்செட் ஆன அதிமுக மாஜிக்கள்.. என்னாச்சு?

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுகவின் படுதோல்வி எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கட்சியின் மூத்த நிர்வாகிகள் திரும்புவார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. தற்போது வரை வெளியாகி இருக்கும் முடிவுகளின் படி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் முன்னிலையில் இருக்கிறார்.

ஈரோடு கிழக்கில் இதற்கு முன் நடந்த 3 தேர்தல்களில் பெற்ற வாக்கு  வித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இந்த முறை வெல்வார் என்பது உறுதியாகி உள்ளது. 61682 வாக்குகளை தற்போது வரை இளங்கோவன் ஈரோடு கிழக்கில் பெற்றுள்ளார். இதனால் அவரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

அதிமுக வேட்பாளர் 22556 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தில் பின் தங்கி உள்ளார். மூன்றாவது இடத்தில நாம் தமிழர் கட்சி 3604 வாக்குகளை பெற்று மோசமாக பின்னடைவை சந்தித்து உள்ளது. இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பெரிய பின்னடைவை சந்தித்து உள்ளார். அவரின் ஆதரவு வேட்பளார் கே. எஸ் தென்னரசு டெபாசிட் இழக்கும் நிலைக்கு சென்றுள்ளார்.

ஓ  பன்னீர்செல்வத்தை ஓரம்கட்டிவிட்டு.. எடப்பாடி தான் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைத்ததுதான் இந்த தோல்விக்கு முக்கிய காரணம் என்று நிர்வாகிகள் பேச தொடங்கி உள்ளனர். முக்கியமாக ஓ பன்னீர்செல்வத்தை சேர்க்கவே கூடாது என்று அவர் ஒதுக்கியதால் கொங்கு மண்டலத்திலேயே கவுண்டர்கள் அல்லாத மற்ற ஜாதியினர் எடப்பாடி மீது அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது இந்த தேர்தல் தோல்வி காரணமாக இத்தனை நாட்கள் எடப்பாடிக்கு ஆதரவாக இருந்த நிர்வாகிகள் கூட அவருக்கு எதிராக திரும்பும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ | ஈரோடு கிழக்கு வெற்றி.. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தேடி வரும் டாப் பதவி.. அடிதூள்