உலகின் ஆறாவது பணக்காரர் ஆக விளங்கிய அனில் அம்பானி தற்சமயம் மூன்று சீன வங்கிகளுக்கு ரூ. 5276 கோடி கடன் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மூன்று வங்கிகளும் தற்சமயம் உலகம் முழுக்க அனில் அம்பானியின் சொத்துக்களை பறிமுதல் செய்து கடன் தொகையை ஈடு செய்ய முடிவு செய்துள்ளன.
கடன் சுமையில் சிக்கித்தவித்த போதும், அனில் அம்பானி ராஜ வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். பாலிவுட் நடிகை டினா அம்பானியை திருமணம் செய்தார். இந்த தம்பதி மும்பையின் பாலி ஹில் பகுதியில் ஆடம்பர சொகுசு வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானி வசிக்கும் அன்டிலியா உலகின் விலை உயர்ந்த கட்டிடமாக இருக்கிறது. இதேபோன்று அனில் மற்றும் டினா அம்பானி வசிக்கும் வீட்டு மதிப்பும் சற்றே அதிகம் தான். அன்டிலியா மதிப்பு ரூ. 12 ஆயிரம் கோடியாக இருக்கும் நிலையில், அனில் அம்பானியிம் பாலி ஹில் வீட்டு மதிப்பு ரூ. 5 ஆயிரம் கோடி ஆகும்.
இந்த வீட்டின் உள்புறம் முழுக்க வெள்ளை, கிரே நிறங்களில் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை வெளிநாட்டை சேர்ந்த வடிவமைப்பாளர்கள் குழு மேற்கொண்டது.
முகப்பு பகுதியில் பெரிய கண்ணாடிகளால் ஆன ஜன்னல்கள் வீட்டினுள் இயற்கை வெளிச்சத்தை பாய்ச்சுகிறது. இதில் மிகவும் சவுகரியமான சோபா மற்றும் சேர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மேல்தளத்தில் பிரத்யேக வடிவமைப்பு செய்யப்பட்டு உள்ளது.
லாஞ்ச் பகுதியில் குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட சவுகரிம் மிக்க சோபாக்களுடன், பெரிய டிவி செட் மற்றும் ஸ்பீக்கர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று வீட்டின் உள்புறம் அனைத்து அறைகளும் விசேஷ வடிவமைப்பு, ஆடம்பர வசதிகள் மற்றும் அழகிய தோற்றம் கொண்டுள்ளது.
இந்த வீடு முழுக்க 16 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனுள் உடற்பயிற்சி கூடம் மற்றும் நீச்சல் குளம் போன்றவை இருக்கின்றன. இத்துடன் வீட்டின் மேல்புறத்தில் ஹெலிபேட் ஒன்றும் இருக்கிறது. இந்த வீட்டிற்கான மின்சார கட்டணம் ரூ. 60 லட்சம் வரை ஆகும்.
2018 ஆண்டு வெளியான தகவல்களின் படி அனில் மற்றும் டினா தம்பதியினரின் வீடு இந்தியாவின் இரண்டாவது விலை உயர்ந்தது என அறிவிக்கப்பட்டது. இந்த பட்டியலில் முதலிடத்தில் முகேஷ் அம்பானி இருந்தார்.