Saturday, March 25, 2023
HomeLifestyleHealthஉலக மனநல தினம் - அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்ய தகவல்கள்

உலக மனநல தினம் – அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்ய தகவல்கள்

இன்று உலக மனநல தினம். இது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. மனநல ஆரோக்கியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

உலகில் முதல் முறையாக 1992 ஆம் ஆண்டு சர்வதேச மனநல தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தில் மனநல ஆரோக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபடும் மனநல நிபுணர்கள், நரம்பியல் நிபுணர்கள் மற்றும் பலரை ஒருங்கிணைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான உலக மனநல தினத்தின் தீம் இரக்கம் ஆகும். மனித உறவுகளை பலப்படுத்தி, தனிமை உணர்வை போக்க இரக்க உணர்வு வழி செய்கிறது. அந்த வகையில், மனநல ஆரோக்கியம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

உலகில் ஐந்தில் ஒரு குழந்தை மற்றும் இளம் பருவத்தினருக்கு மனநல பாதிப்பு ஏற்படுகிறது.

மன அழுத்தம் தான் மன நல பாதிப்புகளுக்கு முக்கிய காரணி ஆகும். உலகில் சுமார் 26.4 கோடி பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் 14 வயதுக்கும் குறைவான வயதுடையவர்கள் ஆவர்.

ஒவ்வொரு ஆண்டு 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதில் ஒவ்வொரு 40 நொடிகளுக்கு ஒருவர் தற்கொலை காரணமாக உயிரிழக்கின்றனர்.

தற்கொலை செய்பவர்கள் பெரும்பாலும் 15 முதல் 29 வயதுடையவர்கள் ஆவர். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களை விட 10 முதல் 20 ஆண்டுகள் முன்கூட்டியே உயிரிழக்கின்றனர்.

ஏழு நாடுகளில் மனநல துறை ஊழியர்கள் ஒரு லட்சம் பேருக்கு இரண்டு பேரும், வளர்ந்த நாடுகளில் ஒரு லட்சம் பேருக்கு 70 பேர் வரை சேவையாற்றி வருகின்றனர்.

மன அழுத்தம் மற்றும் கவலை காரணமாக உலக பொருளாதாரத்தில் ஒரு லட்சம் கோடி டாலர்கள் வரை இழப்பு ஏற்படுகிறது.