உலக தேங்காய் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. தேங்காய் தினத்தன்று, தேங்காயால் செய்யப்பட்ட பல்வேறு பொருட்களின் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.
தேங்காயின் பங்கு சமையலில் இன்றியமையாதது. சமையல் மட்டுமின்றி தேங்காய் ஓடு, தேங்காய் நாறு பல இடங்களில் பயன் படுத்தப்படுகிறது.
தென்னை வளர்ப்பு நம் நாட்டில் சுமார் 10 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ஆகிய நான்கு தென் மாநிலங்களில் தேங்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
தேங்காயில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நம் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் உண்டாக்குகிறது.
தேங்காய் பயன்கள்:
- தேங்காய் பாலில் மோனோலாரின் நிறைந்துள்ளது. இது வளர்சிதை மாற்றத்துக்கு தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றலை தருகிறது. மற்றும் தேங்காய் பால் தாய் பாலுக்கு நிகரான ஒன்றாக கருதப்படுகிறது.
- தேங்காய் பால் வயிற்று புண் வராமல் தடுக்கிறது.
- இளநீர் பருகுவது சிறுநீரக தொற்று மற்றும் சிறுநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
- தேங்காய்களில் பாலிபீனால் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளன, இவை செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.
- தேங்காயில் அமினோ அமிலங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இது இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
- தேங்காய் கொப்பரையிலிருந்து எடுக்கப்படும் தேங்காய் எண்ணெயை உட்கொள்வது தொப்பை கொழுப்பைக் குறைக்கும்.
- தேங்காய் எண்ணெய்யில் உள்ள எச்.டி.எல் (நல்ல) கொழுப்பு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.
- தோல், முடி மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இது தோல் மாய்ஸ்சரைசராக செயல்படுவதாகவும், தோல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.