Sunday, May 28, 2023
HomeLifestyleமகளிர் தினம்: கடற்பாசியை தேடி கடலில் இறங்கும் பெண்கள்...

மகளிர் தினம்: கடற்பாசியை தேடி கடலில் இறங்கும் பெண்கள்…

கடலில் மூழ்கி முத்தெடுப்பார் என்று கேள்விப்பட்டிருப்போம் ஆனால், பாசி எடுக்கும் பெண்கள் குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் கடல் பாசி எடுப்பில் அசத்திவருகிறார்கள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவப் பெண்கள்.

தமிழ்நாடு 14 கடலேரா மாவட்டங்களை உள்ளடக்கி, 1076 கி.மீ. நீளமுள்ள கடற்கரையை கொண்டுள்ளது. இது இந்தியாவின் இரண்டாவது நீண்ட கடற்கரையாகும். இதில் குறிப்பாக மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை பகுதி கடல் வளம் மிக்க பகுதியாகும். அதாவது மண்டபம்-ராமேஸ்வரத்தை இணைக்கும் கடல் பகுதி. இந்த பாக் நீரிணை பகுதி மாவட்டங்களில் 286 மீனவ கிராங்கள் உள்ளன. விசைப்படகுகள், நாட்டுபடகுகள் மூலமாக நேரடி மீன்பிடிப்பு முறை வழக்கத்தில் இருந்தாலும், ஆழமற்ற கடலோர பகுதிகளில் வர்த்தக ரீதியாக கடற்பாசிகள் வளர்க்கும் முறை இருந்து வருகிறது.

இந்திய கடற்பரப்பில் 844 வகையான கடற்பாசிகள் உள்ளன. இவற்றில் 60 வகைகள் வணிகரீதியாக முக்கியத்துவம் பெறுகின்றன. கடற்பாசிகளை சிவப்பு, பச்சை மற்றும் பழுப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் தற்போதை கடற்பாசி உற்பத்தி ஆண்டுக்கு சராசரியாக 10,000 மெட்ரிக் டன்களாக உள்ளது. கடற்பாசியை புரதச்சத்து மிக்க உணவு பொருள் மட்டுமல்ல, அழகு பொருட்கள் தயாரிப்பிலும், தொழில் நிறுவனங்களில் மூல பொருளாகவும் விளங்குகிறது.

ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் அதிகளவில் கடற்பாசி வளர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வகைகுடா கடற்பகுதியில் குருசடை தீவு, கோரித் தீவு என 21 குட்டி தீவுகள் அமைந்துள்ள. கடல் வளம் மிக்க பகுதி என்பதால், உலகில் வேறு எங்கும் காணாப்படாத கடல் வாழ் உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. இதன் அடிப்படையிலேயே, மன்னார் வளைகுடா பகுதி தேசிய கடல் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக இங்கு கடலுக்கு அடியிலும், உயிரிழந்த பவளப்பாறைகளிலும் வளர்ந்துள்ள பாசிகளை எடுக்கும் பணிகளில் மீனவப் பெண்கள் அசத்தி வருகின்றனர். அதோடு கடற்பாசி வளர்ப்பிலும் இவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடலில் மூழ்கி பாசி எடுக்கும் தொழிலில் சுமார் 2500-க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீரற்ற கடல் அலை வேகம், உப்பு தண்ணீர் என இவர்களது வாழ்வாதாரத்தை கரைசேர்க்க போராடி வருகின்றனர் இந்த மீனவப் பெண்கள். பெருமளவில் வருமானம் இல்லையென்றால், குடும்பத்தை நினைவில் வைத்து கொண்டு சாவல் மிக்க பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

தெர்மகோல் மூலமாக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய வத்தையில் காலை 8 மணிக்கு பாசி எடுக்கும் பணியை தொடங்குகிறார் சுகந்தி. இவர் கடந்த 25 ஆண்டுகளாக ஆழமற்ற கடல்பகுதிக்குச் சென்று கடலில் மூழ்கி கடற்பாசி எடுக்கும் பணியை செய்து வருகிறார். காலை 8 மணிக்குச் சென்றால், மாலை 4 மணிக்குதான் கரை திரும்புவார். மரிக்கொழுந்து, கஞ்சிப்பாசி, கட்டக்கோரை என 4 வகையான பாசிகளை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். ஆனால், பாசி எடுக்கும் தொழில் மூலமாக வரக்கூடிய வருவாய் போதுமானதாக இருக்க வில்லை என்று வேதனை தெரிவிக்கிறார் சுகந்தி.

ALSO READ | தினமும் சாப்பிட வேண்டியது என்னெ்னன? கடைப்பிடிக்க வேண்டியது என்னென்ன?