Saturday, May 27, 2023
HomeLifestyleகன்னத்துல கை வைச்சா உண்மையில கப்பல் கவிழ்ந்துடுமா?

கன்னத்துல கை வைச்சா உண்மையில கப்பல் கவிழ்ந்துடுமா?

என்ன கன்னத்துல கை வச்சுருக்க.. கப்பலா கவிந்து போச்சு..? இந்த வார்த்தையை கேட்காதவர்கள் யாருமே இல்லை. கன்னத்தில் கை வைத்தால் என்ன அவ்வளவு பெரிய குற்றமா? நம்மையும் மீறி நாம் மிகுந்த சோகத்தில் இருக்கும்போது, நமக்கு ஒரு வேதனை ஏற்படும்போது நம் கைகள் நமது கன்னத்தை தாங்குவது இயல்பு. இது ஒரு குற்றமா?

சிலர் கன்னத்தில் கை வைத்தால் வீட்டில் கஷ்டம் ஏற்படும், உடல்நிலை சரியில்லாமல் போய்விடும் போன்ற காரணங்களை சொல்வார்கள். அது முற்றிலும் பொய். அப்படியென்றால் கன்னத்தில் கை வைக்காத என்றால் என்ன அர்த்தம்?

  • உண்மையிலேயே கன்னம் என்று குறிப்பிட்டிருப்பது கன்னக்கோல் என்பதாகும். இந்த கன்னக்கோலானது திருடும்போது துளையிடுவதற்காக பயன்படுத்தும் ஒரு பொருளாகும்.
  • அதாவது அந்த காலத்தில் கடல் கடந்து வணிகம் செய்வதற்கு கப்பலே மிகவும் உதவியாக இருந்தது.
  • அந்த செல்வம் நிறைந்த கப்பலானது கடலில் கவிழ்ந்து விட்டால் ஆடம்பரமான வாழ்க்கை கூட ஏழ்மையாக மாறிவிடும்.
  • அந்த மாதிரியான தருணத்தில் கூட எந்தவொரு தவறான வேலைகளையும் செய்யக்கூடாது என்பதற்காகவே கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார்கள்.

ஆனால் தற்போது உள்ள காலத்தில் இந்த வார்த்தைகளை சாதாரணமாகவே கூறுகிறோம். இனியாவது சரியான அர்த்தத்துடன் கூறுவோம். இனி நாம் அர்த்தம் தெரிந்தே அதை பயன்படுத்துவோம்.

ALSO READ | ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துகிறீங்களா? இவ்ளோ ஆபத்து இருக்கா..?