சமீபத்தில் லவ் டுடே படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் காதலர்ளர்கள் இருவரும் தங்களது மொபலை மாற்றிக் கொண்டு பரஸ்பரம் தெரிந்து கொள்ளும் காட்சி வைக்கப்பட்டிருக்கும். இருவருக்குள் பிரச்னையே அங்குதான் எழும். தாங்கள் தெரியாத விஷயங்கள் எவ்வளவு உள்ளன என்பதை ஒருவரையொருவர் புரிந்து கொள்வார்கள்.
இங்கு அநேகமான காதல் ஜோடிகள் லவ் டுடே படத்துடன் ஈசியாக ஒத்துப்போவர்கள். கடந்த காலங்கள் போல் தற்போதைய காதல் கதைகள் கிடையாது. முதல் காதலுக்கான எல்லைகளை எளிதாக வரையறுக்க முடிகிறது.
1.வெளிப்படைத்தன்மை
காதலர்களுக்கு வேண்டிய முக்கிய விஷயம் இது. நீங்கள் உங்கள் காதலியிடமோ, காதலரிடமோ வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். மறைப்பதற்கு எதுவும் இல்லாத உறவுகளை மேம்படுத்தும்போத அதில் சண்டைக்கு வாய்ப்பு குறைகிறது
2.பொய் பேசுவது
ஒரு சின்ன விஷயமானாலும் பொய் கூறினால், அது எப்போது வேண்டுமானலும் ஒரு பிரச்னையை எழுப்பலாம். சின்ன சின்ன பொய் சில நேரங்களில் உங்களை தற்காத்து கொள்ள உதவும் என்று எண்ணாதீர்கள். காதல் உறவு திருமணமாக மாறும் போது, நீங்கள் சொன்ன பொய்கள் நிச்சயம் உங்களை பாதிக்கும்
3.நம்பகத்தன்மை
காதலர்களுக்குள் இருக்க வேண்டிய முக்கிய பொறுப்பு இது. உறவுக்குள் நம்பிக்கை இல்லை என்றால் உறவுக்கான அர்த்தமே இல்லை.
நல்ல நம்பிக்கையை இருவரும் கொடுக்கும் பட்சத்தில், யாரலும் உங்கள் உறவில் விரிசல் ஏற்படுத்த முடியாது. நம்பிக்கை மூலமாகத்தான் உங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். இருவரும் பரஸ்பரம் நம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும். அதை கெடுக்கும் விதமான செயல்களை செய்யக் கூடாது
4. தனிநபர் தலையீடு
காதலர்களுக்குள் அடிக்கடி சண்டை வருவது வழக்கமான விஷயம்தான். ஆனால், அதை உங்கள் நண்பர்களிடமோ, விருப்பமானவர்களிடமே பகிர்ந்து கொள்ளக் கூடாது.உங்களுக்குள் ஏற்படும் சிறு, சிறு பிரச்னைகளை நீங்களே தீர்த்து கொள்ள வேண்டும்.
5.அன்பை வெளிப்படுத்துவது
காதல் உறவுகளில் ஒருவரையொருவர் அன்பை வெளிப்படுத்துங்கள். மனதிற்கு வைத்து கொண்டு இருப்பது மட்டுமே காதல் ஆகாது. முடிந்த வரை சின்ன சின்ன சர்ப்ரைஸ் கொடுப்பது, கிஃப்ட் பரிசளிப்பது, சுற்றுலா செல்வது என மெனகெடல்கள் அவசியம்