Monday, May 29, 2023
HomeLifestyleஉடலுறவு கொள்வதால் முகப்பரு ஏற்படுமா..? உண்மை என்னப்பா?

உடலுறவு கொள்வதால் முகப்பரு ஏற்படுமா..? உண்மை என்னப்பா?

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் உடலுறவு என்பது கட்டாயம் தேவைப்படும் ஒன்றே. இன்றும் நமது சமூகத்தில் அதைப்பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு தயங்குவதன் காரணமாகவே பலரது தாம்பத்ய வாழ்வும் சலிப்பில் முடிகிறது. பலருக்கு உடலுறவு குறித்து தப்பான எண்ணங்களும் உள்ளது. அதில் ஒன்றுதான் உடலுறவு கொள்வதால் முகப்பரு உண்டாகும் என்பது ஆகும்.

முகப்பரு உண்டாகுமா?

இது ஒரு மிகப்பெரிய தவறான கருத்து. உடலுறவு ஒருபோதும் முகப்பருவை ஏற்படுத்தாது. ஆனால் உடலுறவின் போது கவனக்குறைவாக இருந்தால் முகப்பருவுடன் சரும பிரச்சனைகளும் ஏற்படும். இவற்றுடன் உடலுறவின் போது சருமத்தை சேதப்படுத்தும் சில விஷயங்களையும் செய்யும் போது, தோல் பாதிக்கப்படுகிறது.

நீண்ட நேரம் உடலுறவு கொள்ளும்போது அதிக வியர்வைக்கு வழிவகுக்கிறது. உங்கள் உடலில் இருந்து அதிக எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் பருக்கள் மற்றும் முகப்பரு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் தோல் தொடர்பான பிரச்சனைகள் ஏதேனும் எழுந்தால், அது உங்கள் உடல்நலுடன் தொடர்புடையது என்றே நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Tasty chettinad Chicken biryani Recipe in tamil

உடலுறவின் போது சிலர் மசாஜ் எண்ணெய், சருமத்திற்கு பொருந்தாத சில ரசாயனங்கள் கொண்ட பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாகவும் முகப்பரு ஏற்படுகிறது. ஏனெனில் மசாஜ் ஆயில் பயன்படுத்தும் போது அது உங்கள் துணையின் முகத்தில் ஒட்டிக்கொள்ளும். இதை சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால் பருக்கள் தோன்றி அவதியை தரும்.

எனவே, துணையுடன் உடலுறவு கொள்ளும் நேரத்தில் தேவையற்ற எண்ணெய்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். மேலும். நாம் எடுத்துக்கொள்ளும் எண்ணெய் பலகாரங்களும், பயன்படுத்தும் சோப்புகளும் முகப்பருவிற்கு காரணமாக அமையலாம்.

ALSO READ | எந்த இடத்தில் முத்தம் தந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? இவ்ளோ விஷயம் இருக்கா?