Tuesday, March 28, 2023
HomeLifestyleHealthகொரோனா நோயாளிகளில் 80 சதவீதம் பேருக்கு வைட்டமின் டி குறைபாடு

கொரோனா நோயாளிகளில் 80 சதவீதம் பேருக்கு வைட்டமின் டி குறைபாடு

கொரோனாவைரஸ் பாதிப்பு காலக்கட்டத்தில் வைட்டமின் டி பற்றிய தகவல்கள் அதிகளவு வெளியாகி வருகிறது. ஊரடங்கு காரணமாக பலரும் வீட்டில் இருந்து பணியாற்றி வருவதால், வைட்டமின் டி குறைபாடு அதிகரித்து வருவதாக உடல்நல வல்லுநர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கொரோனாவைரஸ் பாதிப்பில் சிக்கியவர்களில் சுமார் 80 சதவீதம் பேருக்கு வைட்டமின் டி குறைபாடு இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது. வைட்டமின் டி குறைபாடு காரணமாக எலும்புகள் பலவீனமாகி, இதயம் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

Also Read: வைட்டமின் டி மற்றும் கொரோனா வைரஸ்- இப்படி ஒரு தொடர்பு இருக்கா?

மேலும் உடலின் நோய் எதிர்ப்பு திறன் குறைந்து, சுவாசம் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் அதிகம் ஆகும். பெண்களுடன் ஒப்பிடும் போது ஆண்களுக்கு வைட்டமின் டி குறைபாடு அதிகம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

வைட்டமின் டி குறைபாடு காரணமாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு மன உளைச்சல், இதயம் சார்ந்த குறைபாடு என பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தியதாக ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வைட்டமின் டி குறைபாடு காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.