Monday, March 27, 2023
HomeLifestyleஉடலுக்கு ஆரோக்கியம் தரும் உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி..?

உடலுக்கு ஆரோக்கியம் தரும் உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி..?

தற்போதைய நவீன காலத்தில் சத்தான உணவு கிடைப்பது மிகப்பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. முன்பெல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கு சத்தான ஆகாரங்களை அடிக்கடி செய்து கொடுப்பார்கள். இப்போது துரித உணவுகளின் மோகத்தால் அந்த பழக்கம் குறைந்துள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளில் உளுந்தங்கஞ்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. வாரத்திற்கு இருமுறை அல்லது தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது மூட்டு, இடுப்பு, கால் வலி உள்ளிட்ட பல பிரச்சனைகள் தீரும். மாதவிடாய் கால சிரமங்கள் குறையும். மெலிந்த உடல்வாகு உடையவர்கள் தொடர்ந்து இதை அருந்தி வந்தால் எடை அதிகரிக்கும். சிறுநீர் தொடர்பான நோய்கள் பறந்து போகும். இதில் தோல் அகற்றப்படாத உளுந்து சேர்த்து கொள்வதால் எலும்புகள் பலப்படும்.

தேவையான பொருட்கள்:

100கி கருப்பு உளுந்து,
கால் கப் அரிசி,
துருவிய தேங்காய்,
ஏலக்காய் தூள்
வெல்லம் அல்லது கருப்பட்டி,
உப்பு தேவையான அளவு,

உளுந்து கஞ்சி செய்வது எப்படி..?

அடுப்பை பற்ற வைத்த பிறகு முதலில் கருப்பு உளுந்தை பாத்திரத்தில் போட்டு நன்றாக சிவக்கும் வரை வறுக்க வேண்டும். அதை தனியாக எடுத்து வைத்துவிட்டு அதே பாத்திரத்தில் பச்சரிசி அல்லது புழுங்கலரிசியை பொரிந்து வரும் வரை வறுக்கவும். வறுத்த உளுந்து, அரிசி ஆகியவை சூடு ஆறிய பிறகு நன்கு பொடியாக அரைக்கவும்.
ஒரு கப் தண்ணீரில் தேவையான அளவு வெல்லம் சேர்த்து நன்கு கரையும் வரை கொதிக்கவிடவும். பாகு பதத்திற்கு செய்ய வேண்டிய அவசியமில்லை. வெல்லம் கரைந்தால் போதும்.

குழந்தைகள் விரும்பி உண்பதற்காக முந்திரி பருப்பு, காய்ந்த திராட்சை, துருவிய தேங்காய் ஆகியவற்றை நெய்யில் வறுத்து கஞ்சியில் சேர்த்து கொள்ளுங்கள். கட்டாயமில்லை.

அரைத்த மாவினை தேவையான அளவு எடுத்து அதனுடன் தண்ணீர் சேர்த்து கலக்கி கொள்ளுங்கள். கட்டியாக இல்லாமல் கலக்கிய பின்னர் மிதமான சூட்டில் கொதிக்க வையுங்கள். அதனுடன் ஏற்கனவே கரைத்து வைத்துள்ள வெல்லத்தை சேர்த்து இறக்கவும். வாசனைக்காக ஏலக்காயை தூவலாம்.

இதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு, காய்ந்த திராட்சை, தேங்காய் ஆகியவற்றை தூவி கொள்ளவும். சத்தான உளுத்து கஞ்சி தயார். இதைத்தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தேக ஆரோக்கியம் பெறலாம். உடனே வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.