Wednesday, May 31, 2023
HomeLifestyleஎந்த இடத்தில் முத்தம் தந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? இவ்ளோ விஷயம் இருக்கா?

எந்த இடத்தில் முத்தம் தந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? இவ்ளோ விஷயம் இருக்கா?

அன்பின் தலைசிறந்த வௌிப்பாடு முத்தம். ஒவ்வொரு உறவுக்குள்ளும் முத்தம் தனித்துவம் வாய்ந்தது. அந்த வகையில், கணவன் மனைவிக்கு இடையேயான முத்தம் என்பது அவர்களது உறவை மேலும் வலுப்படுத்தும். கணவன் – மனைவி இடையே அல்லது காதலர்களிடையே பரிமாறப்படும் முத்தமானது மிகவும் மறக்க முடியாத உணர்வாகும்.

உங்கள் காதலியோ, அல்லது மனைவியோ உங்களுக்கு தரும் ஒவ்வொரு முத்த்திற்கும் அர்த்தத்தை அறிந்து கொள்வோமா? எந்த இடத்தில் முத்தம் தந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

கை:

உங்கள் காதலனோ, காதலியோ உங்கள் கையில் முத்தமிட்டால் உங்கள் மீதான அன்பின் வெளிப்பாடாகும். அவர்கள் உங்களை சிறப்பு, தனித்துவமான மற்றும் மதிப்புமிக்கவர்களாகக் கருதுகிறார்கள் என்று அர்த்தம். உங்களின் உண்மையான குணத்தை அறிந்து அதற்காக அவர்கள் உங்களை நேசிக்கிறார்கள்.

உதடு:

பிரெஞ்சு முத்தம் என்ற இதழ் முத்தத்திற்கு என்று தனிச்சிறப்பு உண்டு. இது உங்கள் அதீத அன்பின் வெளிப்பாடாகும். மேலும், உங்கள் துணையுடன் நீங்கள் உறவு கொள்ள விரும்புவதின் விருப்பமும் ஆகும்.

வயிறு:

வயிற்றில் முத்தமிடுவது என்பது உங்கள் துணை உங்களை பாதுகாப்பதை வெளிப்படுத்துவதன் அறிகுறியாகும், நீங்கள் அவர்களை நம்பலாம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று அர்த்தம் ஆகும். உங்கள் மனைவி கர்ப்பமாக இருக்கும்போது அவர்களது வயிற்றில் முத்தமிடுவது குழந்தை, தாய், தந்தை மூன்று பேரின் அன்பையும் மிகவும் நெருக்கமாக்கும்.

நெற்றி:

முத்தத்திலே நெற்றியில் இடும் முத்தத்திற்கு மிகவும் தனித்துவம் உண்டு. அக்கறை, பாசம் மற்றும் பாதுகாப்பு உணர்வின் வெளிப்பாடே நெற்றியில் முத்தமிடுவதை காட்டுகிறது. உங்கள் துணையுடன் நீங்கள் நெருக்கம் மற்றும் நம்பிக்கையை அதிகரிக்க நெற்றியில் முத்தமிட வேண்டும். அது உங்கள் துணைக்கு மிகுந்த நம்பிக்கையை உங்கள் மீது அளிக்கும்.

கன்னம்:

கன்னத்தில் முத்தமிடுவது பாசத்தையும் நெருக்கத்தையும் குறிக்கிறது. இது ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பை அதிகரிக்கும்.

மூக்கு:

உங்கள் துணை மீது நீங்கள் தீவிர அன்பைக் கொண்டுள்ளீர்கள் என்பதன் வெளிப்பாடே மூக்கின் மீதான முத்தம். இது காமத்தை வெளிப்படுத்துவது அல்ல. மேலும் உங்கள் காதல் துணை மீது அன்பு, அக்கறை மற்றும் மரியாதையை வெளிப்படுத்துகிறது.

கழுத்து:

முத்தத்தில் கழுத்தில் இடப்படும் முத்தத்திற்கு ஒரு தனி மகிமை உண்டு. இது காமத்தின் வெளிப்பாடு என்றே கூறலாம். காமம், பாலியல் தூண்டுதல்களை இந்த முத்தம் வெளிப்படுத்துகிறது. இந்த முத்தமானது உடலுறவுக்கு வழிவகுக்கும்.

ALSO READ | எந்த மாதிரி கனவுக்கு என்னென்ன அர்த்தம் தெரியுமா..? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!