ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களின் வாழ்விலே ஒரு அற்புதமான தருணம் எதுவென்றால் அது திருமணம். ஏனென்றால் ஒரு மனிதனின் வாழ்க்கையே திருமணத்திற்கு முன்பு, திருமணத்திற்கு பின்பு என்றே பிரித்துவிடலாம்.
திருமணம் என்றாலே ஆண்களுக்கே வெட்கம் வந்துவிடும், பெண்களுக்கு சொல்லவா வேண்டும். வெட்கத்தில் முகம் சிவந்துவிடும். திருமண சந்தோஷத்தில் பெண்கள் திளைத்தாலும் அவர்களது அழகை பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். ஏனென்றால், திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு ஏராளமான அலைச்சல்களும், சிரமங்களும் இருக்கும். முகம் கலையாக இருக்கவும், மனம் நிறைவாக இருக்கவும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது முதல் கீழ்க்கண்ட விஷயங்களை செய்து வரவும்.
தூக்கம் :
• உடல் ஆரோக்கியத்திற்கும், உள்ள ஆரோக்கியத்திற்கும் முதலில் தேவை நிம்மதியான தூக்கம். உங்களின் முகம் பளபளப்பாக இருக்க நன்றாக தூங்குங்கள்.
• சரியான தூக்கம் இல்லாவிட்டால் கண்களுக்கு கீழ் கருவளையம் ஏற்பட்டு, திருமணத்தின்போது வீண் சிரமத்தை ஏற்படுத்திவிடும்.
தியானம் :
• தினந்தோறும் 15 நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும்.
• தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தம் குறைவதுடன், தெளிவான மனநிலையிலே இருப்போம்.
• தியானம் மனநிலையை பராமரிப்பது மட்டுமின்றி தெளிவான மனநிலையுடன் இருப்பதால் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
ஆரோக்கியமான உணவு:
• உங்கள் முகம் வறண்டு போகாமல் இருக்க போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீரையும் குடிக்கலாம்.
• உணவில் காய்கறிகள், பழங்கள், சத்தான உணவுகள், புரதம் நிறைந்த உணவுகள் போன்றவற்றை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
• பொரித்த உணவு, சிப்ஸ் வகைகள், சாக்லேட்டுகள், ஐஸ்கிரீம்கள், சோடாக்கள் போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது.
உடற்பயிற்சி:
• உடற்பயிற்சி என்பது எப்போதுமே ஆரோக்கியத்தை மேம்படுத்தும். திருமணம் நிச்சயிக்கப்பட்டது முதல் உடல் எடையை பராமரிக்க ஆரோக்கியமான உடற்பயிற்சிகளை செய்வது நல்லது ஆகும்.
• இதன் மூலம் உங்கள் எடையை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க முடியும்.
• வயிறு மற்றும் தொடைகள் போன்ற பகுதிகளில் எடை அதிகரிக்காமல் இருக்க உடற்பயிற்சி கைகொடுக்கும்.
பேஷியல்:
• பெண்கள் பொதுவாக முகத்திற்கு இயற்கையான பொருட்களை கொண்டு பேஷியல் செய்து வருவது நல்லது.
• அதுவும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது முதல் அடிக்கடி பேஷியல் செய்து வருவது நல்லது ஆகும்.
• முகத்தின் பொலிவு குறையாமல் இருக்க இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சருமத்துக்கேற்ற பேஷியல் செய்ய வேண்டும்.
• கடலை மாவு உள்பட இயற்கையான பொருட்களை கொண்டு பேஷியல் செய்வது நல்லது ஆகும்.
மேற்கூறிய செயல்களை திருமணத்திற்காக மட்டுமின்றி எப்போதும் கடைபிடித்தால் அக அழகும், புற அழகும் நன்றாகவே இருக்கும். ஆண்களும் இதை கடைபிடிக்கலாம்.
ALSO READ | அடேங்கப்பா..! மண்பானையில் சமைத்து சாப்பிட்டால் இவ்ளோ நன்மைகளா..?