ஒருவரின் வாழ்வில் மிகவும் முக்கியமான விஷயமாக இருப்பது திருமணம். ஏனென்றால் ஆண் மற்றும் பெண் இருவரின் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது திருமணம் ஆகும். அப்பேற்பட்ட திருமணத்தை மிகவும் நல்ல நாள் பார்த்து, நல்ல நேரத்தில் பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடன் செய்ய வேண்டும்.
திருமணம் எந்த நேரத்தில் செய்யக்கூடாது என்பதை கீழே விரிவாக காணலாம்.
- திருமணம் மல மாதத்தில் இடம் பெறக்கூடாது. மல மாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பௌர்ணமி ஒரே மாதத்தில் இடம் பெறுவது ஆகும்.
- ஆனி, ஆவணி, தை, பங்குனி ஆகிய மாதங்களில் திருமணம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
- சுக்கில பட்சம் தவிர கிருஷ்ண பட்ச காலங்களில் திருமணம் செய்யக்கூடாது.
- ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்னங்களில் தான் திருமணம் நடத்த வேண்டும். இதர லக்னங்களில் நடத்தக்கூடாது.
- துவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளில் திருமணம் செய்யக்கூடாது.
- ரோகிணி, மிருகசீரிஷம், மகம், உத்திரம், உத்திராடம், அஸ்தம், உத்திரட்டாதி, சுவாதி, அனுஷம், மூலம், ரேவதி ஆகிய சுப நட்சத்திரங்களில் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும். பிற நட்சத்திரங்களில் திருமணம் நடைபெறக்கூடாது.
- அக்னி நட்சத்திரம், மிருத்யு பஞ்சகம், கசர யோகங்கள் போன்ற அசுப காலங்களில் திருமணம் நடைபெறக்கூடாது.
- திருமணம் நடைபெறும் நேரத்தில் குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் திருமண லக்னத்திற்கும், மணமக்கள் ஜென்ம ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெறக்கூடாது.
- மணமக்கள் பிறந்த தேதி அல்லது பிறந்த கிழமைகளில் திருமணம் நடைபெறக்கூடாது.
ஜோதிடர்களும் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கப்போகும் மணமக்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் திருமணம் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். நீங்களும் திருமணம் எந்த காலங்களில் செய்யக்கூடாது என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.