இன்றைய நவீன காலத்தில் நமது வாழ்க்கை முறை ஏராளமான மாற்றங்களை கண்டுள்ளது. கட்டில், மெத்தையில் படுத்தால்தான் தூக்கமே வருகிறது என்று சொல்லும் அளவிற்கு மக்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. நம் கட்டில், மெத்தையில் படுப்பதே நிம்மதியாக ஆரோக்கியமான தூக்கத்திற்காகவே ஆகும். ஆனால், சில நேரங்களில் நாம் தேர்வு செய்யும் தவறான கட்டில்கள் மற்றும் மெத்தைகள் நமது ஆரோக்கியத்தை கெடுத்து நிம்மதியையும் இழக்க வைத்துவிடும்.
தர்ப்பை புல் பாய்
இதனால்தான் நாம் பெரும்பாலும் தூங்குவதற்கு பாயை தேர்வு செய்கிறோம். இன்றளவும் பெரும்பாலான குடும்பங்கள் பாயில்தான் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். பாயில் தூங்குவதால் நாம் நிம்மதியான தூக்கத்தை பெற முடியும். அதற்காக நாம் எந்தவித பாயை தேர்வு செய்கிறோம் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
பாய்களிலே மிகச்சிறந்த மருத்துவ குணமும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்டது தர்ப்பைப் புல் பாய். தர்ப்பை புற்களுக்கு ஆன்மீகத்தில் தனி இடம் உண்டு. தர்ப்பைப் புல் தொன்மையான ஒருவகை தாவரம். இது வளருமிடங்களில் மிதமான குளிர்ச்சியையும், மன அமைதியையும் உணர முடியும்.
மருத்துவ குணம்
முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் போதும், அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்கும் போதும், கையிலும் பிண்டத்தோடும் பயன்படுத்தப்படுவது, தர்ப்பைப் புல். அதற்கு அவ்வளவு மகிமை உள்ளது.
தர்ப்பைப் புல்லால் செய்யப்படும் பாய் விரிப்பில் படுத்து உறங்கினால் உடல்சூடு தணியும். மன உளைச்சல் நீங்கும். நல்ல உறக்கம் கிடைக்கும்.. நமது உடலின் ரோக்கியம் நீடிக்கும். இத்தனை மகிமைகள் நிறைந்த தர்ப்பை புல் பாய்கள் தற்போது கிடைப்பது என்பது மிகவும் குறைவாகிவிட்டது. நாம் பாய் செய்பவர்களிடம் இதற்காக பிரத்யேகமாக கேட்டால் மட்டுமே இதுபோன்ற தர்ப்ப்பை புல் பாய்களை நாம் கேட்டு பெறலாம்.
தர்ப்பை புற்களால் செய்யப்பட்ட பாய்களில் நிம்மதியாக படுத்து உறங்கி உடல் நலத்தில் ஏற்படும் மாற்றங்களை விரைவில் காணுங்கள்.