Wednesday, May 24, 2023
HomeLifestyleஇன்று சித்திரை முதல் நாள்...! இவ்வளவு சிறப்புகளா?

இன்று சித்திரை முதல் நாள்…! இவ்வளவு சிறப்புகளா?

தமிழ் மாதங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மாதம் சித்திரை மாதம் ஆகும். சித்திரை மாத பிறப்பை தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.

சித்திரை மாதம் என்றால் என்ன?

சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் என்று கூறப்படுகிறது. சித்திரை மாதத்தை வசந்த ராகம் என்றும் கூறுவர். சித்திரை முதல் நாளை பிரம்மதேவன் படைத்ததாக புராணங்கள் கூறுகின்றன. சித்திரை சுக்கில பட்ச அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது. சித்திரை மாதத்தினை சைத்ரா என்றும், சைத்ர விஷு என்றும் போற்றுகிறார்கள்.

சித்திரை மாத சிறப்புகள்:

சித்திரை முதல் நாளன்றுதான் நான்முகன் இப்பூவுலகைத் தோற்றுவித்தார் என்று புராணம் சொல்கிறது. சித்திரை மாத பௌர்ணமி நாளில் சிவபெருமான் தங்கப் பலகையில் சித்திரம் ஒன்றினை வரைய, அதிலிருந்து சித்திரகுப்தன் அதாவது, எமதர்மனின் கணக்கர் தோன்றினாராம். அதே மாதத்தில், சித்திரை நட்சத்திர தினத்தன்று தான் நீலாதேவி மற்றும் கர்ணிகாம்பா ஆகியோரை சித்ரகுப்தன் மணந்ததாகப் புராணம் சொல்கிறது.

சித்ரா பௌர்ணமி:

திருமாலின் அவதாரமான பரசுராமன் இந்நாளில் தான் அவதரித்தாகக் கூறப்படுகிறது. சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாவது பிறை தோன்றும் நாளே அட்சய திதியை என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் தங்கம் வாங்கினால் இல்லத்தில் செல்வம் குவியும் என்ற ஐதீகமும் உண்டு.

திருக்கல்யாணம்:

சொக்கநாதர்-மீனாட்சியைத் திருக்கல்யாணம் செய்து கொள்ளும் விழா மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும். சித்ரா பௌர்ணமியன்று தான் தேவேந்திரன் சொக்கநாதரை வழிபட்டுப் பேறுகள் பெற்றதாக புராணத் தகவல் உண்டு. இத்தகைய பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள சித்திரை தாயை நாமும் உவகையோடு வரவேற்று எல்லா வளமும், நலமும் பெற்று வாழ்வோம்.

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த சித்திரை மாதத்தின் முதல் நாள் கோலாகலமாக தமிழ் புத்தாண்டாக மக்களால் கொண்டாடப்படுகிறது.

ALSO READ | நிம்மதி தரும் தீப வழிபாடு..! எந்த எண்ணெய் பயன்படுத்தினால் என்னென்ன பலன்கள்?