Thursday, June 1, 2023
HomeLifestyleகோடை காலம்.. சமையல் அறையில் கட்டாயம் செய்ய வேண்டியது என்னென்ன?

கோடை காலம்.. சமையல் அறையில் கட்டாயம் செய்ய வேண்டியது என்னென்ன?

தற்போது கோடை காலம் என்பதால் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயில் காலத்தில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கலாக ஆரோக்கிய சிக்கல் அமைகிறது. இதனால். கோடை காலத்தில் உணவு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

நாம் எப்போதும் உணவுப்பொருட்கள் மட்டுமின்றி உணவு சமைக்கும் சமையலறை மற்றும் சமையல் பாத்திரங்களையும் நாம் சுத்தமாக பராமரிக்க வேண்டும். கோடை காலத்தில் சமையல் அறையில் கட்டாயம் பின்பற்ற வேண்டியவை என்னென்ன?

  • இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் வைக்கும்போது மற்ற உணவுகள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை அருகில் வைக்கக்கூடாது.
  • காய்கறிகள் மற்றும் இறைச்சி போன்றவற்றை வெட்டுவதற்கு என தனித்தனி பலகை மற்றும் கத்தியை பயன்படுத்த வேண்டும்.
  • இறைச்சியை நன்கு கழுவி சுத்தம் செய்த பிறகே பயன்படுத்த வேண்டும்.
  • சோடா உப்பு மற்றும் தண்ணீரை உபயோகித்து வாரம் ஒருமுறை குளிர்சாதன பெட்டியை துடைக்க வேண்டும்.
  •  சமையலறையில் பயன்படுத்தும் துணிகளை அவ்வப்போது துவைத்து வைத்து கொள்ள வேண்டும். இதன் மூலம் பூஞ்சைகள், கிருமிகள் உண்டாவதை தடுக்கலாம்.
  • சாப்பிடும் முன்பும், சமைக்கும் முன்பும் காய்கறிகள் மற்றும் பழங்களை சுத்தமாக கழுவ வேண்டும்.
  • இறைச்சி போன்றவற்றை குளிர்சாதன பெட்டியில் வைக்கும்போது, கவரில் போட்டு அதன் அடிப்பகுதியில் வைப்பதன் மூலம் கிருமிகள் பரவாமல் இருக்கும்.
  • கோடைகாலத்தில் இறைச்சி, முட்டை போன்ற அசைவ உணவுகளை நன்கு சமைத்த பிறகே உண்ண வேண்டும்.
  • குளிர்சாதன பெட்டி காற்றோட்டமின்றி இருந்தால் கிருமிகள் எளிதாக உருவாகிவிடும் வாய்ப்புள்ளது.
  • எண்ணெயில் பொரித்த உணவுகளையும், அசைவ உணவையும் குறைவாக எடுத்து கொள்வது நல்லது.
  • கோடை காலத்தில் நமது உடல் புழுக்கமான சூழ்நிலையில் குளிர் பானங்களை உட்கொள்வதன் மூலம் தோலில் உள்ள இரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்பட்டு வெப்ப இழப்பை ஏற்படுத்தும். எனவே, குளிரூட்டப்பட்ட பானங்களை தவிர்த்து கொள்ளவும்.
  • கோடைகாலத்தில் அளவுக்கு அதிகமான பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது.

மேலே கூறியவற்றை கண்டிப்பாக கடைபிடித்தால் சமையலறை கிருமி தொற்று இல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்.

ALSO READ | சிலிண்டர் கேஸை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி?