நாம் அணியும் ஆடை என்பது நமது உடல் அழகிற்கு மட்டுமின்றி, நமது ஆரோக்கியம் சார்ந்ததும் ஆகும். ஒவ்வொரு கால தட்பவெப்பநிலைக்கும் ஏற்றவாறு ஆடைகள் அணிவதுதான் சிறந்தது ஆகும். தற்போது கோடைகாலம் தொடங்கி வெளுத்து வருவதால், நாம் பெரும்பாலும் கதர் ஆடைகள் அணிவதே சிறந்தது ஆகும்.
அதுவும் நாம் என்ன நிறத்தில் ஆடைகளை தேர்வு செய்கிறோம் என்பதும் முக்கியம் ஆகும். பொதுவாக இருண்ட மற்றும் அடர் நிறங்கள் அதிக சூரிய ஒளியை கிரகிப்பதால் நம் சருமத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இலேசான மற்றும் வெளிர் நிற ஆடைகளை அணிவது வெப்ப கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாப்பை வழங்கும்.
பச்சை
பச்சை கோடைகாலத்திற்கு ஏற்ற சிறந்த நிறங்களில் ஒன்றாகும். எந்தநிற பேண்ட்டுடனும் கச்சிதமாக பொருந்தும் இந்த நிற ஆடைகள் உங்களுக்கு கச்சிதமாக இருப்பதுடன் உங்களுக்கு குளிர்ச்சியையும் கொடுக்கும்.
மஞ்சள்
கோடை காலத்திற்கு மிகவும் சிறந்த ஆடைகளில் மஞ்சள் நிற ஆடையும் ஒன்றாகும். வெயில் காலத்தில் அணிவதற்கு ஏற்ற வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும் போது, மஞ்சள் அதில் முக்கிய இடம்பெறும். அடர்ந்த நிற பேண்ட்களுடன் அணியும் போது இது சிறப்பான தோற்றத்தையும், பாதுகாப்பையும் வழங்கும்.
பிங்க்
பிங்க் நிற ஆடைகள் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது ஒரு மூடநம்பிக்கை. ஆண்களும் இந்த நிற ஆடைகளை அணிந்து ஸ்டைலான தோற்றத்தை உருவாக்கலாம். கோடைகாலத்தில் சூரிய வெப்பத்தில் இருந்து உங்களை திறம்பட பாதுகாக்கும் திறன் பிங்க் நிறத்திற்கு உண்டு.
சிவப்பு
வெயில்காலத்தில் அணிவதற்கு சிறந்த நிறங்களில் சிவப்பு நிற ஆடையும் உள்ளது. அடர் நிற சருமம் கொண்டவர்கள் இந்த நிற ஆடை அணிவதைத் தவிர்ப்பது நல்லது. வெளிர் நிற சருமம் உள்ளவர்கள் இந்த நிறத்தை தாராளமாக அணியலாம்.
ஆரஞ்ச்
ஆரஞ்சு நிறம் எந்த பருவக்காலத்திலும் அணிவதற்கு சிறந்த நிறமாக இருக்கிறது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவான நிறமாக இருக்கும் இது கோடைகாலத்தின் மோசமான வெப்ப கதிர்வீச்சிலிருந்து உங்களை சருமத்தைப் பாதுகாக்கும்.
வெள்ளை
கோடைகாலத்திற்கான சிறந்த நிறங்களில் வெள்ளை எப்போதும் முதலிடத்தில் இருக்கும். எந்த நிற வெள்ளை ஆடையும் கோடைகாலத்திற்கு சிறந்தது. ஏனெனில் வெள்ளை நிற ஆடைகள் அதிகபட்ச வெப்பத்தை பிரதிபலிக்கும் என்பதால், கொளுத்தும் வெப்பத்தில் உங்களுக்கு ஆறுதலையும், சுவாசத்தையும் தரும். ஆனால், துவைப்பதற்கு சற்று சிரமமாக இருக்கும் என்பதே உண்மை.
மேலே கூறிய நிறங்களில் கூறிய ஆடைகளை நீங்கள் அணிந்தாலும் நீங்கள் எதுபோன்ற துணிகளை அணிகிறீர்கள் என்பதும் முக்கியம். வெயில் காலம் என்பதால் அதற்கேற்றவாறு இறுக்கமான ஆடைகளை தவிர்த்துவிடுவது நல்லது ஆகும்.
ALSO READ | மாங்கல்ய பலம், ஆயுள் வலிமை தரும் சந்திர தரிசனம்..! எப்படி வணங்குவது?