Tuesday, March 28, 2023
HomeLifestyleHealthகரும்பு சாப்பிடப் போறீங்களா? அவசரப்படாதீங்க.. இதை படிச்சுட்டு சாப்பிடுங்க!

கரும்பு சாப்பிடப் போறீங்களா? அவசரப்படாதீங்க.. இதை படிச்சுட்டு சாப்பிடுங்க!

பொங்கல் பண்டிகை அப்படினாலே இனிப்பான பண்டிகைதான் நம்ம தமிழர்களுக்கு. அப்படிப்பட்ட பொங்கல் பண்டிகைக்கே இனிப்பு சேக்குறது கரும்புதான். கரும்போட சுவைதான் பொங்கல் பண்டிகையோட தனித்துவம்னே சொல்லலாம். கரும்பு இல்லாம போச்சுனா அது பொங்கலே கிடையாதுனு சொல்லலாம்.
பொங்கல் பண்டிகைக்கு நாம விரும்பி சாப்பிட்ற கரும்புல இனிப்பு மட்டுமில்லாம ஏராளமான சத்துக்கள் எல்லாம் இருக்குது. அது என்னனு பாக்கலாம் வாங்க.

இவ்ளோ சத்துக்களா..?

புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள் கரும்பில் அதிகம் காணப்படுகின்றன. நாம் வீட்டில் பயன்படுத்தும் சர்க்கரையை விட கரும்பில் தான் அதிகமான வைட்டமின்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரும்புச் சத்து, மக்னீசியம் , வைட்டமின் பி1, ரிபோஃப்ளேவின் போன்றவை கரும்பில் இருக்கின்றன.

சிறுநீரகத்தின் நன்மை

நமது உடலில் தேவைக்கு அதிகமாக இருக்கும் உப்பு, தண்ணீர் ஆகியவற்றை முறையாக வெளியேற்றி சிறுநீரகங்களை கரும்பு பராமரிக்கிறது. இதற்கு கரும்பில் உள்ள டையூரிடிக் பண்புகள் உதவியாக உள்ளன. எலுமிச்சை சாறு அல்லது இளநீருடன் கரும்பு சாறு கலந்து குடிப்பதால் சிறுநீரக பிரச்சனைகளை தவிர்க்க முடியும். சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் தொற்று, எரிச்சல் ஆகியவற்றை நீக்க கரும்பு சாறு உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

கரும்பில் நோய்களை எதிர்த்து போராடும் ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகின்றன. இவை மலேரியா, தோல் புற்றுநோய், இதய நோய், சர்க்கரை வியாதி ஆகியவற்றை சிக்கலான நிலைமைக்கு கொண்டு செல்லும் ஆக்ஸினேற்ற அழுத்தத்தில் இருந்து செல்களை காக்கிறது.

கர்ப்பிணிகளுக்கு உகந்தது

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை நாம் எடுத்துக் கொள்ளும் போது எடை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கரும்பு உண்ணும் போது அது எடை குறைப்புக்கு உதவுகிறது. கர்ப்பிணிகளுக்கு மிதமான எடை அதிகரிப்புக்கு உதவுகிறது. கர்ப்பிணிகள் கரும்புச் சாற்றை இஞ்சியுடன் அருந்துவது மிகச்சிறந்தது ஆகும்.

இதய நோய் உள்ளவர்கள் சாப்பிடலமா..?

இதய நோய் உள்ளவர்களும், இதய நோய் ஏற்பட வாய்ப்புள்ளவர்களும் கரும்பை அதிகமாக சாப்பிட்டால் உயிரிழப்பு கூட ஏற்படலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2014ல் செய்யப்பட்ட ஆய்வின்படி சர்க்கரையில் இருந்து 20% கலோரிகளை எடுத்து கொள்பவர்கள், சர்க்கரையிலிருந்து 8% கலோரிகளை எடுப்பவர்களை விடவும் இதய நோயால் தாக்கப்படும் வாய்ப்பு 38% அதிகம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, கொலஸ்ட்ரால், உடல் பருமன் பிரச்சனை ஆகியவை கருப்பினால் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே அளவாக கரும்பு உண்டால் பலன் கிடைக்கும். சில நோய்கள் இருப்பவர்கள் கரும்பை தவிர்த்துவிடுவது நல்லது. மேலும், கரும்பு சாப்பிடுவதால் பற்களும் நன்றாக வெண்மை நிறத்திற்கு மாறுகிறது.