சர்வதேச சர்க்கரை நோய் அமைப்பு வெளியிட்ட சமீபத்திய தகவல்களின் படி உலகம் முழுக்க சுமார் 42.5 கோடி பேர் சர்க்கரை நோய் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. மேலும் 2045 ஆண்டு வாக்கில் இந்த எண்ணிக்கை 62.9 கோடிகளாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
உடலில் சர்க்கரை நோய் ஏற்பட்டால் பல்வேறு இதர பாகங்கள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனினும், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சரியான மருத்துவம் செய்து கொண்டால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
டைப் 2 ரக சர்க்கரை நோய் பாதிப்பு கொண்டவர்கள் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு பாதிப்பில் இருந்து வெளிவந்துள்ளனர்.
சர்க்கரை நோய் ஏற்பட்டால் உடலின் பல்வேறு இதர பாகங்களும் பாதிக்கப்படும். அதில் நம் சருமமும் அடங்கும். சரும பாதிப்புக்கான அறிகுறி தென்பட்டால் தற்போதைய சிகிச்சை முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை உணர வேண்டும்.
அந்த வகையில் சர்க்கரை நோய் பாதிப்பு காரணமாக சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
புள்ளிகள்
நெக்ரோமையோசிஸ் லிபொய்டிகா என அழைக்கப்படும் ஒருவகை சரும பாதிப்பு முகப்பரு போன்ற தடிப்புகளை உடலில் ஏற்படுத்தும். பின் இது தழும்பாக மாறி சருமம் வீங்க துவங்கும். இது சிவப்பு, மஞ்சள் அல்லது கருஞ்சிவப்பு நிறங்களில் இருக்கும்.
சருமத்தை சுற்றி ஏற்படும் பேட்ச் மிளிரும் நிறம் கொண்டிருக்கும். மேலும் அந்த பகுதியில் எரிச்சல் மற்றும் வலி ஏற்படும். இதுபோன்ற உணர்வுகள் ஏற்பட்டால் உடலில் சர்க்கரை நோய் உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.
வெல்வெட் தடிப்புகள்
கழுத்து, அக்குள் பகுதியில் தடிப்பு அல்லது வெல்வெட் போன்ற உணர்வு ஏற்படும் பட்சத்தில் இரத்தத்தில் அதிக இன்சுலின் உள்ளது என அறிந்து கொள்ளலாம். இதுபோன்ற நிலையை மருத்துவர்கள் அகந்தோசிஸ் நைக்ரிகன்ஸ் என அழைக்கின்றனர்.
காயம் குணமாகும் காலம்
அதிக சர்க்கரை அளவு கொண்டவர்கள் உடலில் எங்கு காயம் ஏற்பட்டாலும் அது சரியாக நீண்ட காலம் ஆகும். போதுமான இரத்த ஓட்டம் இல்லாத காரணத்தால் நரம்புகளில் பாதிப்பு ஏற்படும். பாதிக்கப்பட்ட நரம்புகளுக்கு இரத்த ஓட்டம் குறைந்தால் உடலில் காயம் குணமாக அதிக காலம் ஆகும். இதுபோன்ற நிலையை நீரிழிவு அல்சர் என அழைக்கப்படுகிறது.
வறண்ட சருமம்
உடலில் சருமம் வழக்கத்தை விட அதிகமாக வறண்டு போனாலோ அல்லது எரிச்சல் உணர்வு ஏற்படுவது. இது போன்ற நிலையை சரும லோஷன்களும் குணப்படுத்தாத போது மருத்துவரை அவசியம் சந்திக்க வேண்டும்.
கண்
கண் இமைகள் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மஞ்சள் நிற செதில்கள் ஏற்பட்டால் உடலில் சர்க்கரை நோய் உள்ளதை அறிந்து கொள்ளலாம். இதுபோன்ற நிலையை சேந்தெல்ஸ்மா என அழைக்கப்படுகிறது.