கோடை காலம் வந்தாலே நம் அனைவருக்கும் பெரிய சவாலாக இருப்பது சருமத்தை பராமரிப்பது ஆகும். இதனால், கோடைகாலத்தில் நாம் இயல்பாக உண்ணும் உணவுடன் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது பலன் அளிக்கும். அப்படி என்னென்ன உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை கீழே காணலாம்.
அவகேடோ
- நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்றவை இதில் உள்ளது.
- அவகேடாவை தினமும் சாப்பிட்டால் சருமம் மென்மையாக மாறும்.
- அவகேடாவை தினமும் சாப்பிடுவதால் சருமம் பளபளப்பாகவும், ஆரோக்கியமாக மாறும்.
- அவகேடோ சருமத்தை உள்ளிருந்து சருமத்தை பளபளக்க வைக்க உதவுகிறத
வால்நட்ஸ் - வால்நட்ஸ் மட்டுமே அதிகளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைக் கொண்ட ஒரே சைவ உணவு.
- வால்நட்சில் அக்ரூட் பருப்புகள் உள்ளன. இவற்றில் சோடியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் புரதம் உள்ளது. இவை அனைத்தும் நல்ல சருமத்திற்கு முக்கியமானவை.
- இயற்கையாகவே உள்ளிருந்து உங்கள் சருமத்தை சரிசெய்யும்.
ப்ரோக்கோலி
- ப்ராக்கோலி ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.
- வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
- சருமத்தை உள்ளிருந்து சரிசெய்யும் குணம் ப்ராக்கோலிக்கு உண்டு.
- முகம் பளபளப்பாக ஜொலிக்க உதவுகிறது
தக்காளி
- தக்காளியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
- தக்காளி சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
- தக்காளியில் லைகோபீன் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது.
- தக்காளியை தொடர்ந்து சாப்பிடுவதால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் எளிதில் நீங்கி, சருமமும் சீராகும்.
இந்த கோடைகாலத்தில் மேற்கண்ட உணவுகளை தொடர்நத சாப்பிட்டு வந்தால் உங்கள் சருமம் பளபளப்பாக இருக்கும்.
ALSO READ | கொளுத்துகிறது வெயில்..! சம்மரில் குழந்தைகளுக்கு தர வேண்டிய பழங்கள் என்னெ்ன? பெற்றோர்களே படிங்க..!