• எறும்புகளோ, பூச்சிகளோ நமக்குத் தெரியாமல் உணவில் விழுந்து உயிர் விடக்கூடாது என்பதற்காக தான் இலையை சுற்றிலும் தண்ணீரை சாப்பிடும் முன்பு தெளிக்கின்றோம்.
• நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் நாற்காலிகள் மற்றும் ஸ்டூல்களின் நடுவிலுள்ள துளை இருப்பதை பார்த்திருப்போம். இந்த துளையானது அதனை உடையாமல் காக்கிறது. இந்த துளை நாம் அமரும்போது ஸ்டூலின் கட்டமைப்பு மாறாமல் இருக்கவும், அழுத்தத்தை சமமாகப் பரப்பவும் உதவுகிறது.
• வீட்டிலோ, கடைகளிலோ பிளாஸ்டிக் ஸ்டூல்களை ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி வைத்திருப்போம்.
• துளை இல்லாத ஸ்டூல்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி கொள்ளும். ஸ்டூலின் நடுவே துளை இருந்தால் காற்று வெற்றிடத்தை உருவாக்காமல் தடுத்து ஸ்டூல்களை பிடித்தெடுக்க உதவுகிறது.
• இந்தியாவில் குறிப்பாக இறந்து போனவர்களை புதைக்கும் பொழுது அவர்கள் நீண்ட காலமாக பயன்படுத்திய பொருட்களையும் உடன் புதைக்கவோ, எரிக்கவோ செய்வார்கள்.
• இதன் காரணம் அந்த பொருட்களை சுற்றி எப்பொழுதும் அவர்களது ஆரா எனப்படும் ஆன்ம பிம்பம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் தான் இறந்தவர்களின் பொருட்களையும் சேர்த்து புதைக்கவோ, எரிக்கவோ செய்கின்றனர் என்று நம்ப்படுகிறது
• மேலும் உயிரிழந்தவர் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்து உயிரிழந்தால் அந்த பொருட்களில் நச்சு, பாக்டீரியாக்கள் தொற்று இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதன் காரணமாகவும் இவ்வாறு செய்கிறார்கள்.
இதுபோன்ற நம் அன்றாட வாழ்வில் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு பின்பும் அறிவியல் காரணங்கள் நிறைந்துள்ளன.