ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் எந்த நிற ஆப்பிள் சாப்பிடுவது அதிக நன்மையை தரும் என தெரியுமா?
நிறம் மட்டுமின்றி பச்சை மற்றும் சிவப்பு நிற ஆப்பிள்கள் வெவ்வேறு சுவை மற்றும் ஆரோக்கியம் தரும் சத்துக்கள் நிறைந்தவை ஆகும். எனினும், இருவித ஆப்பிள்களில் எது சிறந்தது என அறிந்து கொள்ள வேண்டுமா? இருவித ஆப்பிள்கள் பற்றி இந்த தொகுப்பில் அதிகம் அறிந்து கொள்வோம்…
சுவை மற்றும் தோற்றம்
பச்சை நிற ஆப்பிள்கள் புளிப்பு சுவை மற்றும் தடிமனான தோல் கொண்டிருக்கும். இதனால் இவை சற்றே மொறுமொறுவென இருக்கும். சிவப்பு நிற ஆப்பிள்கள் இனிப்பாகவும், அதிக சாறு கொண்டிருக்கும். மேலும் இதன் தோல் சற்றே மெல்லியதாக இருக்கும். இனிப்பு சுவை காரணமாகவே பலரும் சிவப்பு நிற ஆப்பிள்களை அதிகம் தேர்வு செய்கின்றனர்.
ஆப்பிள்களின் ஆரோக்கிய நன்மைகள்
இருவித ஆப்பிள்களில் ஏராளமான வைட்டமின் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன. இவற்றில் அதிகப்படியான ஆண்டி ஆக்சிடண்ட்கள், பெசடின், குயிர்செடின் மற்றும் பிளேவனாய்டுகள் உள்ளன. இவை இதயம் மற்றும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் தன்மை கொண்டவை ஆகும். மேலும் இதில் குறைந்த அளவு பைபர் மற்றும் கலோரிக்கள் உள்ளன. இதனால் உடல் எடையை குறைக்க நினைப்போர் இந்த பழம் சாப்பிடலாம்.
நியூட்ரியன்ட் அளவில் உள்ள வேறுபாடுகள்
பச்சை மற்றும் சிவப்பு நிற ஆப்பிள்கள் இடையே சத்துக்கள் அடிப்படையில் சிறிதளவே மாற்றம் கொண்டுள்ளன. பச்சை நிற ஆப்பிளில் அதிகளவு வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் இ மற்றும் வைட்டமின் கே நிறைந்துள்ளது. மேலும் இதில் சிவப்பு ஆப்பிளில் இருப்பதைவிட அதிகளவு ஐயன், பொட்டாசியம் மற்றும் புரோடீன் நிறைந்துள்ளது.
ஆய்வுகளின்படி பச்சை நிற ஆப்பிள்கள் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சாப்பிட சிறந்த பழம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக சர்க்கரை அளவை குறைக்க நினைப்பவர்கள் பச்சை நிற ஆப்பிள் சாப்பிடலாம். சிவப்பு நிற ஆப்பிள்களில் அதிக ஆண்டி ஆக்சிடண்ட்கள் நிறைந்துள்ளன. மேலும் இது அதிக சுவை கொண்ட பழம் ஆகும்.
எது சிறந்தது
ஆரோக்கிய நன்மைகளை பொருத்தவரை பச்சை மற்றும் சிவப்பு நிற ஆப்பிள்கள் இரண்டிற்கும் அதிகளவு வேறுபாடுகள் இல்லை. எனினும், சிவப்பு நிற ஆப்பிள்களை விட பச்சை நிற ஆப்பிள்களில் அதிக நியூட்ரியன்ட்கள் நிறைந்துள்ளன. உடலில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த நினைப்பவர்கள் சிவப்பு நிற ஆப்பிள் சாப்பிடலாம்.