Tuesday, January 31, 2023
HomeLifestyleபொங்கல் லீவுக்கு டேஸ்ட்டியான ரெசிபி என்ன செய்யலாம்…? வாழைப்பழ அடை முதல் பால் பனியாரம் வரை…!

பொங்கல் லீவுக்கு டேஸ்ட்டியான ரெசிபி என்ன செய்யலாம்…? வாழைப்பழ அடை முதல் பால் பனியாரம் வரை…!

பொங்கல் பண்டிகை என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகமும், குஷியும் ஆகிவிடுவார்கள். ஏனென்றால் தமிழர்களின் அடையாளமாக திகழ்வது இந்த பொங்கல் பண்டிகை.

இந்த பொங்கலில் வெளியூர்களில் இருப்பவர்கள் அனைவரும் தங்களது குடும்பங்களுடன் இணைந்து கிராம மக்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒன்று சேர்ந்து திருவிழாவாக கொண்டாடி கூடி மகிழ்வார்கள்.

அப்படி குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடும் பொங்கல் பண்டிகையில் என்னென்ன ரெசிபிகள் எல்லாம் இயற்கையான முறையில் செய்யலாம் தெரியுமா..?

கோதுமை வாழைப்பழ அடை

தேவையான பொருட்கள்:
• கோதுமை மாவு – 200 கிராம்,
• வாழைப் பழம் – 2,
• தேங்காய் – 2 துண்டு,
• ஏலக்காய் – 2,
• வெல்லம் – 200 கிராம்,
• நெய் – தேவையான அளவு, முந்திரி – 5.

செய்வது எப்படி…?
• கோதுமை மாவுடன் வாழைப் பழம், ஏலக்காய்த் தூள், வெல்லம் சேர்த்து, தண்ணீர் விட்டு அடை மாவு பதத்துக்குக் கரைக்கவும்.
• தோசைக் கல்லைக் காயவைத்து, மாவை ஊற்றிச் சிறிய அடைகளாக வார்த்து, நெய் விட்டு, வெந்ததும் எடுக்கவும்.
• பொடியாக நறுக்கிய தேங்காய், முந்திரித் துண்டுகளை மேலாகத் தூவிப் பரிமாறவும்.

பால் பணியாரம்

தேவையான பொருட்கள்:
• பச்சரிசி, உளுந்து – தலா ஒரு கப்,
• பால் – ஒரு லிட்டர்,
• சர்க்கரை – ஒரு கப்,
• ஏலக்காய்த்தூள் – ஒரு தேக்கரண்டி,
• எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்வது எப்படி…?

• பச்சரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து, இரண்டு மணி நேரம் ஊற வைத்து, நைசாக அரைத்து, உப்பு சேர்க்கவும்.
• மாவு கெட்டியாக இருக்க வேண்டும். வாணலியில், எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமாக எரிய விடவும்.
• மாவை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி போட்டு, பொரித்தெடுத்து, எண்ணெயை வடிய விடவும்.
• இதை, குளிர்ந்த நீரில் போட்டு எடுக்கவும். பாலை காய்ச்சி, சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.
பொரித்து வைத்த பணியாரங்களை பாலில் சேர்த்து சாப்பிட்டால் தேவாமிர்தமாக இனிக்கும்.

வரகரசி பால் பொங்கல்

தேவையானவை:
• வரகரசி – 1 கப்,
• பாசிப்பருப்பு – 100 கிராம்,
• வெல்லம் – 100 கிராம்,
• பால் – 3 கப்,
• தேங்காய் துருவல் – அரை கப்,
• நெய் – 2 கரண்டி,
• முந்திரி, திராட்சை – தேவையான அளவு,
• ஏலக்காய், ஜாதிக்காய் பொடி – தலா 1 சிட்டிகை.

செய்வது எப்படி…?

• பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வறுக்கவும்.
• வெல்லத்தில் நீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி வைக்கவும்.
• அடி கனமான பாத்திரத்தில் பால் கொதித்ததும், வரகரசி, பாசிப்பருப்புடன் சிறிது தண்ணீர் சேர்த்து, குழைய வேக விடவும்.
• அடுப்பை நல்ல தணலில் வைத்து, வெல்லபாகை அதில் சேர்க்கவும்.
• நெய், தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறவும்.
• முந்திரி, திராட்சை, ஏலம், ஜாதிக்காய்ப் பொடியை நெய்யில் வறுத்து, கலவையில் சேர்த்து இறக்கவும்.
அற்புதமான, டேஸ்டான வரகரசி பால் பொங்கல் தயார் ஆகிவிட்டது. சாப்பிட்டு எஞ்சாய் பண்ணுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments