Thursday, June 1, 2023
HomeLifestyleRecipeசெட்டிநாட்டு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி..? என்னா டேஸ்ட் தெரியுமா?

செட்டிநாட்டு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி..? என்னா டேஸ்ட் தெரியுமா?

பிரியாணி என்றாலே அனைவருக்கும் நாக்கிலே எச்சில் ஊறும். ஏனென்றால் பிரியாணியின் சுவைக்கு மயங்காதவர் எவருமே இல்லை என்றே சொல்லலாம். அந்தளவிற்கு பிரியாணி தமிழ்நாட்டில் படு பேமசான மற்றும் சுவையான உணவு ஆகும்.

பிரியாணியிலே ஏராளமான வகைகள் உள்ளது. அதில் செட்டிநாடு சிக்கன் பிரியாணிக்கு என்று தனி ருசிப்பிரியர்களே உள்ளனர். அந்த செட்டிநாடு சிக்கன் பிரியாணியை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

கோழிக்கறி – அரை கிலோ
அரிசி – 4 கப்
வெங்காயம் – 3 (நறுக்கியது)
தக்காளி – 3
புதினா – 1 சிறிய கட்டு
கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி
மிளகாய் தூள் -அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
புளித்த தயிர் – கால்கப்
தேங்காய் பால் – 2 கப்
வறுத்த முந்திரி – 7
பிரியாணி இலை – 2
எண்ணெய் – தேவைக்கேற்ப
வெண்ணெய் – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன்

மசாலாவிற்கு :

பச்சை மிளகாய் – 5 , இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன், பட்டை – 2, ஏலக்காய் – 3, கிராம்பு – 4, தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை :

  • முதலில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, பட்டை, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அரிசியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  •  பின்பு சிக்கனை நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடித்து, அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட், புதினா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  •  குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிரியாணி இலை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
  • பின்பு அதில் ஊற வைத்துள்ள கோழிக்கறி துண்டுகளை சேர்த்து நன்கு சிக்கனின் நிறம் மாறும் வரை வதக்கி விட வேண்டும்.
  • அதன் பிறகு அதனுடன் தக்காளி, புளித்த தயிர், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பிரட்ட வேண்டும்.
  • பின்பு குக்கரை சிறிது நேரம் மூடி வைத்து, தீயை குறைத்து, 10 நிமிடம் கோழிக்கறியை வேக வைக்க வேண்டும்.
  • பின்பு தேங்காய் பாலை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, தீயை அதிகரித்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரிசியை சேர்த்து 8 கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் வெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் போட்டு குக்கரை மூட வேண்டும்.
  • பின்னர், 2 விசில் வந்ததும் இறக்கி, அதன் மேல் கொத்தமல்லி தழை, முந்திரி, 1 டீஸ்பூன் எலுமிச்சஞ்சாறு சேர்க்க வேண்டும்.
    இப்போது சூடான, சுவையான, வாசனையான செட்டிநாடு சிக்கன் பிரியாணி தயார். விடுமுறை நாட்களிலும், விசேஷ நாட்களிலும் செய்து வீட்டில் இருப்பவர்களை அசத்துங்கள்.