Saturday, May 27, 2023
HomeLifestyleRecipeமிகவும் சுலபமான ஒரு சிக்கன் ரெசிபி செய்யணுமா?

மிகவும் சுலபமான ஒரு சிக்கன் ரெசிபி செய்யணுமா?

மிகவும் சுலபமான ஒரு சிக்கன் ரெசிபி செய்யணுமா? அப்போ உங்களுக்கான ஒரு டிஷ் தான் இந்த லெமன் பெப்பர் சிக்கன் . இது சாதம், சப்பாத்தி, தோசை போன்ற அனைத்திற்கும் ஒரு பொருத்தமான சைடு டிஷாக இருக்கும். இந்த Lemon Pepper Chicken ரெசிபியை எப்படி செய்யலாம் என்று கீழே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சிக்கன் – 1 kg
பிரியாணி இலை – 2
பச்சைமிளகாய் – 5
பட்டை- 2
கோர்ன்ஸ்டார்ச் கலவை (கோர்ன்ஸ்டார்ச் 1 1/2 தேக்கரண்டி + 1/2 டம்ளர் தண்ணீர்)
எலுமிச்சை பழம் – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மிளகு
தயிர் – 3/4 கப்
வெண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை:

  • முதலில் சிக்கனை எவ்வாறு மேரினேட் செய்வது என்று பார்க்கலாம்.ஒரு பாத்திரத்தில் சிக்கனை எடுத்துக் கொள்ளவும் அதில் அரை எலுமிச்சம் பல பழச்சாரை பிழிந்து விடவும்.
  • இதில் இஞ்சி பூண்டு விழுது, ஒன்றை தேக்கரண்டி மிளகுத்தூள், மற்றும் தேவைக்கேற்ப உப்பை சேர்க்கவும்.
  • இதனுடன் பேஸ்ட் பதத்திற்கு அடித்து வைத்துக் கொண்ட தயிரை சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும் (மீதம் உள்ள தயிரை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்)
    இந்த சிக்கன் கலவை 30 நிமிடங்கள் ஊற வேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் மற்றும் வெண்ணையை சேர்க்கவும், பின்பு இரண்டு பிரியாணி இலை, ஐந்தாறு மிளகு, பட்டை இரண்டு சேர்க்கவும்.
  • இதில் மேரினேட் செய்யப்பட்ட சிக்கன் கலவையை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை சிக்கனை திருப்பி விடவும் இவ்வாறாக இரண்டு பக்கமும் வறுபடும் வரை செய்யவும்.
  • பின்பு மீதம் இருக்கும் தயிரை தேவைக்கேற்ப தண்ணீர் உடன் கலந்து சிக்கனில் ஊற்றி மிதமான சூடில் 25 நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
  • சிக்கன் வெந்தவுடன் அதில் காரத்திற்கேற்ப மூன்று முதல் ஐந்து நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை சேர்த்து கிளறி விட வேண்டும்.
  • இறுதியாக கான்ஸ்டார்ச் கலவையை சேர்க்கவும், ஊற்றிய கான்ஸ்டார்ச் தடிமன் ஆனவுடன் அடுப்பை அணைத்து சிறிது கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்.
    சுவையான லெமன் பேப்பர் சிக்கன் ரெடி!

ALSO READ | செம ருசியான பட்டர் இறால் முட்டை மசாலா செய்யனுமா? வாங்க கத்துக்கலாம்!