Saturday, May 27, 2023
HomeLifestyleRecipeசூடான, சுவையான நாண் செய்வது எப்படி? இனிமே ஈசிதான்..!

சூடான, சுவையான நாண் செய்வது எப்படி? இனிமே ஈசிதான்..!

வட இந்தியர்களின் உணவுகளிலே சப்பாத்தியை போன்றே மிகவும் ருசியான உணவு நாண் ஆகும். தமிழ்நாட்டில் கூட வட இந்தியர்களின் நாண் சாப்பிட ஏராளமான மக்கள் உள்ளனர். இந்த சுவையான நாணை வீட்டிலே செய்வது எப்படி என்பதை கீழே விரிவாக காணலாம்.

தேவையான பொருட்கள்:

மைதா மாவு – 1 கப்
கோதுமை மாவு – 1 கப்
சர்க்கரை – 1 ஸ்பூன்
பேக்கிங் சோடா – ½ ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – ½ ஸ்பூன்
தயிர் – ¼ கப்
உப்பு – தேவையான அளவு

செய்வது எப்படி?

• முதலில் ஒரு பவுலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
• அதில் மைதா மாவு, கோதுமை மாவு, சர்க்கரை, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், தயிர், உப்பு, எண்ணெய் இவையெல்லாம் சேர்த்த பிறகு தண்ணீர் ஊற்றாமல் முதலில் மாவை பிசைய வேண்டும்.
• அடுத்து லேசாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு இந்த மாவை பிசைய வேண்டும்.
• பரோட்டாவுக்கு செய்வதை போல் மாவை அடித்து பிசையக்கூடாது.
• பிசைந்த இந்த மாவின் மேலே லேசாக எண்ணெய் தடவி 1 மணி நேரம் வரை மூடி போட்டு மூடி வைத்து விடுங்கள்.
• அடுத்து 1 மணி நேரம் கழித்து மாவை ஒரு மீடியம் சைஸ் உருண்டைகளாக உருட்ட வேண்டும்.
• இதை சப்பாத்தி, பூரி செய்வது போல் மொத்தமாக மாவை உருட்டி வைத்துக் கொண்டு செய்ய முடியாது. ஒவ்வொன்றாக தான் செய்ய வேண்டும்.
• இப்போது சப்பாத்தி கட்டையில் மாவை கை வைத்து லேசாக அழுத்தி அதன் மேல் எள், கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை தூவி அழுத்திய பிறகு மாவை திருப்பி வைத்து சப்பாத்தி உருட்டுவது போல உருட்டுங்கள்
• இதை வட்டமாக திரட்டாமல் கடைகளில் இருக்கும் நாண் போல ஓவல் சைஸில் உருட்ட வேண்டும். மாவை திரட்டும் போது மேலே கொஞ்சம் கோதுமை மாவு அல்லது மைதா மாவு ஏதாவது ஒரு மாவை சேர்த்து உருட்டினால் சரியாக வரும்.
• உருட்டி தயாராக வைத்துள்ள மாவின் மீது லேசாக தண்ணீர் தெளித்து பரவலாக தேய்த்து விடுங்கள். அதற்குள் அடுப்பை பற்ற வைத்து தோசை கல்லை சூடாக்க வேண்டும்.
• தோசைக் கல் நல்ல சூட்டுடன் இருக்கும் போது தண்ணீர் தேய்த்த பக்கத்தை தோசை கல்லில் ஒட்டி விட வேண்டும். அதன் பிறகு ஒரு மூடி போட்டு ஒரு நிமிஷம் வரை வேக விடுங்கள்.
• பிறகு மூடியை எடுத்து விட்டு அடுப்பை மிதமான தீக்கு மாற்றி அப்படியே தோசை கல்லை அடுப்பின் பக்கமாக திரும்பி காட்டுங்கள்.
• நாண் பர்பெக்டாக ஹோட்டல் செய்யப்படுவதை போல மேலே உப்பி அழகாக வந்து விடும்.
• கடைசியாக மேல கொஞ்சம் பட்டர் தடவி எடுத்து விடுங்கள்.
கடைகளில் வருவது போல அருமையான நாண் இப்போது தயார். வீடுகளில் உள்ளவர்களுக்கு கொடுத்து மகிழுங்கள்.