Sunday, May 28, 2023
HomeLifestyleRecipeசூப்பரான மீன் பொரியல் செய்வது எப்படி? ரொம்ப ஈசிங்க.!

சூப்பரான மீன் பொரியல் செய்வது எப்படி? ரொம்ப ஈசிங்க.!

அசைவ உணவுகளிலே அதிகளவு சத்துக்களையும், ஆரோக்கியத்தையும் கொண்டது மீன் ஆகும். அதிலும் மீனைப் பொரித்து சாப்பிடும்போது தனி சுவைதான். அதற்கு நிகர் அந்த மீன் சுவை மட்டுமே ஆகும்.

தேவையான பொருட்கள்:

ஜிலேபி மீன் 1 கிலோ
சின்ன வெங்காயம் 8
சீரகம் 1 டீஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை 1 கொத்து
தேங்காய் துருவல் 1 கப்
உப்பு தேவைக்கேற்ப
கொத்தமல்லி தழை 1 கைப்பிடி

செய்முறை :

  • மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். சுத்தம் செய்த பின் முள் இல்லாமல் உதிர்த்து வைக்கவும்.
  • வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி கொள்ளவும்.
  • மிக்ஸியில் இஞ்சி பூண்டு விழுது, சீரகம், பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு போட்டு வறுக்கவும்.
  • பின் அரைத்த விழுதையும், வெங்காயத்தையும் அதில் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியவுடன் உதிர்த்து வைத்த மீனை போட்டு நன்கு பிரட்டவும்.
  • பின் தேவைக்கேற்ப சிறிது உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கொள்ளவும். பின்பு கொத்தமல்லி தழையை சேர்த்து பிரட்டி இறக்கவும்.

இப்போ சுவையான மீன் பொரியல் தயார். இந்த பொரித்த மீனை சாப்பிட்டு ருசியில் மகிழுங்கள்.