Monday, May 29, 2023
HomeLifestyleRecipeசூடான, சுவையான கோழிக்குழம்பு வைப்பது எப்படி?

சூடான, சுவையான கோழிக்குழம்பு வைப்பது எப்படி?

வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள்தான் பெரும்பாலான மக்களுக்கு விடுமுறை நாட்கள் ஆகும். இந்த விடுமுறை நாட்களில் குடும்பத்தினருடன் நேரம் செலவிடும் மக்கள் அன்றைய தினம் மட்டும் அசைவ உணவுகளை எடுத்து அசத்துவார்கள்.

புதியதாக சமைக்கத் தொடங்குபவர்கள், பேச்சிலராக இருந்து சமைப்பவர்கள் சிக்கன் கிரேவியை மிக எளிதாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இதோ கீழே உள்ள முறையை பாலோ பண்ணுங்க.

தேவையான பொருட்கள்:

* சிக்கன் – 500 கிராம்
* தயிர் – 1/4 கப்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* உப்பு – 1/2 டீஸ்பூன்
* பெரிய தக்காளி – 3
* காஷ்மீரி மிளகாய் – 2
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை – 1/2 இன்ச்
* கிராம்பு – 2
* ஏலக்காய் – 1
* சீரகம் – 1 டீஸ்பூன்
* அன்னாசிப்பூ – 1
* கறிவேப்பிலை – சிறிது
* பெரிய வெங்காயம் – தேவையான அளவு
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் – 1 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது
* தண்ணீர் – தேவையான அளவு
* உப்பு – சுவைக்கேற்ப

சமைப்பது எப்படி?

* முதலில் பெரிய தக்காளியை நறுக்கி, மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக அரைக்க வேண்டும்.
* பின்பு கோழிக்கறியை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அந்த கறியில் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு அடுப்பில் குக்கர் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, சீரகம், கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக தாளிக்க வேண்டும்.
* அதில் வெங்காயத்தைப் போட்டு சிறிது உப்பு தூவி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து சில நிமிடங்கள் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் சேர்த்து கிளற வேண்டும்.
* பின்பு, ஊற வைத்துள்ள கோழிக்கறியை சேர்த்து 3-5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி குக்கரை மூடி, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரை திறந்து, அதில் கரம் மசாலா மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான கோழிக்கறி குழம்பு தயார்.
இனிமேல் வாரந்தோறும் இந்த சாப்பாட்டை செய்து அசத்துங்கள்