இன்று ஞாயிற்றுக்கிழமை. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே வீடுகளில் அசைவம் எடுப்பது வழக்கமான ஒன்றாகும். சில வீடுகளில் அசைவ உணவுகள் எடுக்க முடியாத சூழலில், சைவ உணவுகள் செய்வது வழக்கம்.
அதேபோல, இந்த ஞாயிற்றுக்கிழமையில் அசைவம் எடுக்காவிட்டால் கவலையை விடுங்கள். சோள நூடுல்ஸ் செய்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள் :
சோள மாவு – 1/2 கிலோ
காளான் – 2 கப்
நறுக்கிய வெங்காயம்- 2 கப்
துருவிய குடைமிளகாய் – 2
மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்
கரம்மசாலா – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்வது எப்படி?
• சோள நூடுல்ஸ் செய்வதற்கு சோள மாவை வாணலியில் பச்சை வாசனை போகும்வரை வறுத்து ஆற வைக்கவும்.
• அதில் சூடான தண்ணீர் விட்டு, சிறிது உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
• பிசைந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டுப் பிழிந்து ஆவியில் வேக வைக்கவும்.
• காளானைப் பொடிப்பொடியாக நறுக்கி கரம் மாசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வேக வைக்கவும்.
• பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் வேக வைத்த காளானை சேர்த்து வதக்கவும்.
• நூடுல்ஸ், மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
இப்போது சுவையான சோள நூடுல்ஸ் தயார். குழந்தைகளுக்கு பரிமாறி சுவைத்து மகிழுங்கள்.