Saturday, May 27, 2023
HomeLifestyleHealth‘லேடீஸ்தான் பர்ஸ்ட்’ தாம்பத்ய உறவில் ஆண்கள் விருப்பம் அதுதான் – சொல்கிறது ஆய்வு

‘லேடீஸ்தான் பர்ஸ்ட்’ தாம்பத்ய உறவில் ஆண்கள் விருப்பம் அதுதான் – சொல்கிறது ஆய்வு

பாலியல் உறவு, கணவன் மனைவி இடையேயான தாம்பத்ய உறவு குறித்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் புரிதல் இல்லாத காலம் எல்லாம் மலையேறிவிட்டது என்றே கூறலாம். பாலியல் உறவைப் பொறுத்தவரை தற்போது வரை பல விதமான கேள்விகளும் சந்தேகங்களும் உள்ளன. குறிப்பாக, தன்னுடைய பார்ட்னரின் விருப்பு வெறுப்புகள் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். தாம்பத்ய உறவில் ஆண்கள் தன்னுடைய துணைதான் பாலியல் உறவை தொடங்க வேண்டும், அவர்களின் விருப்பத்தை முதலில் வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால், எப்போதும் முத்தம் கொடுப்பதன் மூலமாக, அணைப்பதன் மூலமாக, பாலியல் உறவில் ஈடுபட இருப்பதை ஆண்கள் தான் விருப்பத்தை தெரிவிக்கிறார்கள். எப்போதுமே லேடீஸ் ஃபர்ஸ்ட் என்று சொல்வதைப் போல, பாலியல் விருப்பத்தையும் பெண்களிடம் இருந்து முதல் ‘மூவ்’ இருக்க வேண்டும் என்பதை பெரும்பாலான ஆண்கள் விரும்புகிறார்கள்.

லேடீஸ் பர்ஸ்ட்

நார்வேஜியன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். 18 வயது முதல் 30 வயது வரை, 92 ஜோடிகள் ஆய்வில் பங்கேற்றனர். இந்த ஜோடிகள் குறைந்தபட்சமாக ஒரு மாதம் முதல் அதிகமாக 9 ஆண்டுகள் வரை ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். மேலும், இந்த ஜோடிகள் வாரத்தில் இரண்டு முதல் மூன்று நாட்களாவது தாம்பத்ய உறவில் ஈடுபடுகின்றனர். இந்த ஆய்வில் இந்த ஜோடிகளில் தாம்பத்ய உறவில் ஈடுபடுவதற்கான தொடக்கத்தை பெண்களே அதிகளவில் தொடங்குவதாக தெரியவந்துள்ளது.

பெண்கள் தன்னுடைய துணையால் பெரியளவில் ஈர்க்கப்பட்டால், அவர்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல், வெட்கப்படாமல் தங்கள் உடலுறவு விருப்பத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

ஆண்கள் விருப்பம்

உடலுறவு கொள்வது பற்றிய தெளிவான கண்ணோட்டம் இருந்தால், எந்த விதமான சூழலாக இருந்தாலும், பெண்கள் அதை பொருட்டாக நினைப்பதில்லை. ஆனால், கணவன் மனைவிக்கு நடக்கும் சண்டைகள், வாக்குவாதங்கள் பெண்களை மனதளவில் பாதிக்கிறது.

இந்த ஆய்வின் முடிவில் பாலியல் உறவு மட்டுமின்றி பல விஷயங்களில் பெண்கள் முதல் முயற்சி செய்வது, முடிவெடுப்பது, ஆலோசனைகள் சொல்வது ஆகியவற்றை ஆண்கள் விரும்புகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. இவ்வாறு செய்யும் போது, பெண்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும், ஆளுமையை அழகாக வெளிப்படுத்துகிறது.