Thursday, May 25, 2023
HomeLifestyleதிருமணத்திற்கு பிறகு பெண்கள் மெட்டி ஏன் அணிய வேண்டும்? எவ்வாறு அணிய வேண்டும்? இவ்ளோ காரணம்...

திருமணத்திற்கு பிறகு பெண்கள் மெட்டி ஏன் அணிய வேண்டும்? எவ்வாறு அணிய வேண்டும்? இவ்ளோ காரணம் இருக்கா?

திருமணம் என்றாலே ஏராளமான சடங்குகளும், சம்பிரதாயங்களும் உண்டு. திருமணமான பிறகு பெண்கள் தங்கள் காலில் மெட்டி அணிவது ஒரு சம்பிரதாயமாக உள்ளது. இன்றைய காலத்தில் பல பெண்கள் அதை விரும்புவதில்லை என்றாலும், பல பெண்கள் மிகவும் விருப்பப்பட்டு அணிகின்றனர்.

திருமணத்தின்போது மணமக்கள் இருவரது காலிலும் மெட்டி அணிவிப்பது வழக்கம். ஆனால், பெரும்பாலான ஆண்கள் தொடர்நது மெட்டி அணிவதில்லை. ஆனால், இன்றும் சில ஆண்கள் தொடர்ந்து மெட்டி அணிகின்றனர். மாங்கல்யத்திற்கு நிகராக கருதப்படும் மெட்டியை மணப்பெண் அம்மி கல்லின் மீது காலை வைத்தபிறகு, அந்த காலின் விரலில் மணமகன் மெட்டி அணிவிப்பார்.

அவ்வாறு மெட்டி அணியும் பொழுது வானத்தில் அருந்ததி என்னும் நட்சத்திரத்தை பார்த்து விட்டு மெட்டியை அணியும்படி கூறுவார்கள். இதைத்தான் “அம்மி மிதித்து.. அருந்ததி பார்த்து” என்று கூறுவார்கள்.

மெட்டியை எவ்வாறு அணிய வேண்டும்?

எவ்வளவு தான் பணம் இருந்தாலும் காலில் அணியும் மெட்டியை தங்கத்தில் அணியக்கூடாது. தற்போதைய காலத்தில் மெட்டியானது விதவிதமான வடிவங்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயத்தில் மெட்டியை அனைத்து விரல்களிலும் அணியக்கூடாது. அவரவர்களின் குல வழக்கப்படி, எப்படியான மெட்டியை அணிய வேண்டுமோ? அந்த மெட்டியை கால் கட்டை விரலின் பக்கத்து விரலில் மட்டுமே அணிய வேண்டும்.

மெட்டி அணிவது ஏன்?

பெண்களுக்கு அழகும், மங்களமும் தரக்கூடிய அணிகலன்களில் முக்கியமானது இந்த மெட்டி. தற்காலத்தில் உள்ள பெண்கள் பலர் மெட்டி அணிவதை திருமணம் செய்து கொண்டதன் அடையாளமாகவே பார்க்கின்றார்கள்.

ஆனால் அவற்றில் ஆன்மிகமும், அறிவியலும் நிறைந்திருக்கின்றன. அந்த வகையில் இந்த மெட்டியை கட்டை விரலின் பக்கத்து விரலில் அணிவதே வழக்கம். ஏனெனில், அந்த விரலில் தான் கருப்பையின் நரம்பு நுனிகள் முடிகின்றது. மெட்டியை இந்த விரலில் அணிவதால் நடக்கும்போது கொடுக்கப்படும் அழுத்தம் கருப்பைக்கு கொடுக்கப்படுவதால், அங்கு இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் மெட்டியை அணிவது கருப்பையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. மேலும் அணியக்கூடிய மெட்டியானது வெள்ளியாக இருப்பதால், அதன் மூலம் பூமியிலிருக்கும் நேர்மறை ஆற்றல் பெண்களுக்கு கிடைக்கின்றது. இந்த காரணங்களால் தான் நம் முன்னோர்கள் பெண்களை கட்டாயம் மெட்டி அணிய கூறி இருக்கிறார்கள்.

மெட்டியை எப்போது மாற்றலாம்?

மெட்டி தேய்ந்து விட்டால் அதனை உடனே மாற்றி விட வேண்டும். மெட்டி தேய தேய கணவன், மனைவி ஒற்றுமை குறையும் என்றும் கருதப்படுகிறது. எனவே மெட்டி அணிபவர்கள் அதனை அதிகம் தேய்ந்து விடாமல் பாதுகாப்பது அவசியமாகும்.