Thursday, June 1, 2023
HomeLifestyleகர்ப்பிணி பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் இதோ…!

கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் இதோ…!

ஒவ்வொரு பெண்ணுக்கும் வாழ்க்கையில் மிகவும் அற்புதமான தருணமாக இருப்பது தான் தாயான தருணமாகவே இருக்கும். குழந்தை பிறக்கும்போது எந்தளவ மகிழ்ச்சி இருக்குமோ, அந்தளவு தான் தாயாக இருக்கிறோம் என்று அறியும்போது இருக்கும்.
பெண்கள் அந்த கர்ப்ப காலத்தில் தங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த காலகட்டத்தில் உணவு, உடற்பயிற்சி, பயணம் என்று அனைத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் வீண் மனஅழுத்தத்தையும், சிக்கல்களையும் சந்திக்க நேரிட்டால் தாயைவிட வயிற்றில் உள்ள குழந்தைக்கு தான் அதிகளவு பாதிப்பு ஏற்படும். இதனால், குழந்தைக்கு போதிய ஆக்ஸிஜன் மற்றும் இரத்தம் கிடைக்காமல் போகும். இதுபோன்ற சிக்கல்களை எவ்வாறு தவிர்ப்பது என்பதை கீழே விரிவாக காணலாம்.

என்ன செய்ய வேண்டும்?

  • கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு செரிமான மண்டலம் மெதுவாக தான் இயங்கும். இதனால், ஒரே நேரத்தில் நன்றாக சாப்பிட முடியாது. இருப்பினும் அச்சமயத்தில் தான் உடலுக்கு அதிகளவு சத்துக்கள் தேவைப்படும். அதாவது சரியான நேரத்தில் போதுமான சத்தான உணவுகளை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும்.
  • நாம் எடுத்து கொள்ளும் உணவு தான் வயிற்றில் வளரும் குழந்தைக்கு வளர்ச்சி தரும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். எனவே, மூன்று வேளை உணவு உண்பதை, சிறிது சிறிதாக பிரித்து ஆறு வேளைகளாக சாப்பிட வேண்டும்.
  • வீட்டை விட்டு அலுவலகத்திற்கு கிளம்பும்போது ஆப்பிள், கொய்யா, வாழைப்பழம், பேரிக்காய் போன்ற சத்துள்ள பழங்களை நறுக்காமல் எடுத்து செல்லவும். அவ்வாறு எடுத்து செல்லும் பழத்தை கடித்து சாப்பிடுவது மிகவும் நல்லதாகும்.
  • உங்களுக்கு எளிதில் ஜீரணமாகாது எனில் பழச்சாறாக அருந்தலாம். இதனால் உடலில் ஏற்படும் வறட்சி நீங்குவதுடன் வயிறும் நிறையும்.
  • அதுமட்டுமல்லாமல் உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய உலர் பழங்களை கர்ப்பிணிகள் கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும். இதை வேலை செய்து கொண்டிருக்கும் போதே சாப்பிடலாம்.
  • மேலே கூறியதை போன்று சாப்பிடாமல் இருந்தால், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைய ஆரம்பித்துவிடும்.
  • இதனால், சிசுவின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். எனவே, எப்போதும் கையில் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டையாவது வைத்திருங்கள். அதை பசிக்கும்போது சாப்பிடலாம்.
  • ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் காலில் இரத்தம் தங்குதல், இரத்தம் கட்டிப்போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதை தடுக்க நடைப்பயிற்சி செய்யலாம்.
  • மேலும் அலுவலகம் முடிந்து வீடு வந்ததும் நல்ல ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து வயிற்றில் உள்ள குழந்தையுடன் சிறிது நேரம் பேசுங்கள்.
  • அப்போது உங்களின் பேச்சுக்கு ஏற்ப குழந்தை அசையும். அதை பார்க்கின்ற பொழுது உங்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும்.

ALSO READ | எந்த மாதிரி கனவுக்கு என்னென்ன அர்த்தம் தெரியுமா..? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!