ஒ வகை இரத்தம் கொண்டவர்களை கொரோனாவைரஸ் பாதிக்கும் அபாயம் குறைவு. ஏ மற்றும் ஏபி வகை இரத்தம் கொண்டவர்களை கொரோனாவைரஸ் பாதிக்க அதிக வாய்ப்புகள் உண்டு என சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவித்து இருக்கின்றன.
சிலருக்கு வைரஸ் பாதிப்பு எளிதில் நடைபெறும் என்றும் சிலருக்கு இவ்வாறு நடக்க வாய்ப்பு இல்லை என ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. கொரோனாவைரஸ் பாதிப்புக்காக சோதனை செய்யப்பட்டவர்களில் சுமார் 4,73,000 பேரின் தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
Read This: வைட்டமின் டி மற்றும் கொரோனா வைரஸ்- இப்படி ஒரு தொடர்பு இருக்கா?
ஆய்வில் தரவுகளை சுமார் 22 லட்சம் பேரின் தகவல்களுடன் ஒப்பிட்டது. இந்த தகவல்களின் படி ஒ வகை இரத்தம் கொண்டவர்கள் ஏ மற்றும் ஏபி வகை இரத்தம் கொண்டவர்களை விட குறைந்த அளவில் கொரோனாவைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருந்தனர் என தெரியவந்துள்ளது.
Read This: இன்றைய தலைமுறையினரின் தவிர்க்க முடியாத பிரச்சனைகள்… கவனமாக இருங்கள்!
அந்த வகையில் ஏ மற்றும் ஏபி வகை இரத்தம் கொண்டவர்களை கொரோனாவைரஸ் பாதிப்பு எளிதில் ஏற்படுகிறது. இரத்த வகை சார்ந்த பாதிப்பு அபாயம் பல்வேறு குழுக்கள் மற்றும் நாடுகளில் வேறுபடும் என ஆய்வு குழுவை சேர்ந்த டார்பன் பேரிங்டன் தெரிவித்தார்.