Tuesday, May 23, 2023
HomeLifestyleபெற்றோர்களே உஷார்..! குழந்தைகளின் பாதுகாப்பில் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னென்ன..?

பெற்றோர்களே உஷார்..! குழந்தைகளின் பாதுகாப்பில் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னென்ன..?

இன்றைய காலத்தில் கூட்டுக்குடும்ப முறைகள் குறைந்து தனிக்குடும்ப முறைகளே அதிகளவில் உள்ளது. அதற்கு காரணம் பொருளாதார சூழலும் முக்கிய காரணம் ஆகும். பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்லும் சூழலில்தான் இன்றைய பொருளாதாரம் உள்ளது. இதனால், பெரும்பாலான வீடுகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்கின்றனர். தனியாக இருக்கும் குழந்தைகளின் பாதுகாப்பில் இன்று பெரியளவில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

தற்போது, கோடைகாலம் தொடங்கி பள்ளி விடுமுறை அளிக்கத் தொடங்கியிருப்பதால் நாம் குழந்தைகளின் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும். இதனால், குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கட்டாயம் கற்றுத்தர வேண்டிய விஷயங்கள் என்னவென்று கீழே காணலாம்.

  • அறிமுகம் இல்லாத நபர்கள் சாக்லேட், பிஸ்கட் கொடுத்தாலும் வாங்கி சாப்பிடக்கூடாது என்று குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்.
  • உணவு, பொம்மை போன்றவற்றை பெற்றோர் அல்லது உறவினரை தவிர யாரிடமும் வாங்கக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்.
  •  பெற்றோரிடம் மறைக்க சொல்லி உறவினர்கள், அண்டை வீட்டார்கள் மற்றும் நண்பர்கள் கூறினாலும் அவற்றை பெற்றோரிடம் தெரியப்படுத்த சொல்லி கொடுக்க வேண்டும்.
  •  குழந்தையின் அந்தரங்க பகுதிகளை தொட்டாலும், அவர்கள் பெற்றோரிடம் சொல்லக்கூடாது என மிரட்டினாலும், என்ன பொருட்களை வாங்கி கொடுத்தாலும் மறைக்காமல் பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என அவர்களுக்கு ஆரம்பத்திலேயே தெரியப்படுத்த வேண்டும்.
  • குழந்தைகளுக்கு வீட்டில் உள்ளவர்களின் பெயர், வீட்டு முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றை சொல்லி தர வேண்டியது அவசியம்.
  • குழந்தைகள் எப்போதும் பெற்றோர் கண்காணிப்பில் இருப்பதுதான் பாதுகாப்பு என்று சொல்லித்தர வேண்டும்.
  • பெற்றோர்களாகிய நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு விவரம் தெரியும் வரை கண்காணிக்க வேண்டும்.
  • குழந்தைகள் பாலியல் ரீதியாக எந்த துன்புறுத்தலுக்கோ, அச்சுறுத்தலுக்கோ ஆளானால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
  • குழந்தைகளை தனியாக எங்கும் அனுப்ப வேண்டாம். அதிகளவில் பாலியல் குற்றங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்களுக்கு நம்பிக்கையான நபர்களாலே நிகழ்த்தப்படுகிறது. இதனால், குழந்தைகள் பாதுகாப்பில் எப்போதும் வீண் விபரீதம் எடுக்கக்கூடாது. அது அவர்களின் எதிர்கால வாழ்க்கையை சிரமப்படுத்தி விடும்.

ALSO READ | கோடை காலத்தில் கண் வறட்சி ஆகுதா..? எப்படி காப்பாற்றிக் கொள்வது?