Wednesday, May 31, 2023
HomeLifestyleHealthதினமும் சாப்பிட வேண்டியது என்னெ்னன? கடைப்பிடிக்க வேண்டியது என்னென்ன?

தினமும் சாப்பிட வேண்டியது என்னெ்னன? கடைப்பிடிக்க வேண்டியது என்னென்ன?

நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உணவு மிக, மிக அவசியம் ஆகும். அந்த உணவுகளை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதன் மூலமாகவே நமது ஆரோக்கியமும் அமையும். முதலில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. இவை இருந்தாலே ஆரோக்கியத்திற்கு ஆபத்து என்றே கூறலாம்.

  • காலை உணவை எப்போதுமே தவிர்க்காமல் சாப்பிடுங்கள்.
  • காலை உணவை 8 முதல் 9 மணிக்குள்ளும், இரவு உணவை 11 மணிக்குள்ளும் சாப்பிட பழகி கொள்ளுங்கள்.
  • வாரத்தில் இருமுறையாவது மீனை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
  • பழங்கள், காய்கறிகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கேன்சர், இருதய நோய்கள் போன்ற பல நோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை. மேலும் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகம்.
  • இதனால் காய்கறி, பழங்களை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
  • இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும் நல்ல கொழுப்பு நட்ஸ் வகைகளில் அதிகம் உள்ளது. எனவே தினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு அல்லது வேர்க்கடலை போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடுவதன் மூலம் உடலை ஆரோக்கியத்துடனும், இளமையுடனும் வைத்து கொள்ள முடியும்.
  • அதிக பசியின்போது அதிக உணவை சாப்பிடக்கூடாது. இது உடல்நல பிரச்சனைகளையும், உடல் பருமனையும் அதிகரிக்கும்.
  • மேற்கூறிய அனைத்தையும் விட உணவை நன்றாக மென்று சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.
  • நீங்கள் ஒருமுறை உணவை விழுங்கும் முன்பு 15 முறை மெல்ல வேண்டும்.
    மேலே கூறியவற்றை முறையாக கடைபிடித்து உணவுப்பழக்கங்களை மேற்கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

ALSO READ | கடையில சாப்பிட போறீங்களா..? ப்ளீஸ் இதை மட்டும் சாப்பிடாதீங்க..!