Quail Eggs Benefits: முட்டைகள் என்றாலே அதில் ஏராளமான புரதங்களும், வைட்டமின்களும் அடங்கியிருக்கும். ஒவ்வொரு பறவையின் முட்டைகளிலும் ஒவ்வொரு விதமான சத்துகள் அடங்கியிருக்கும். காடை முட்டைகளும் மிகவும் பிரபலமானவை.
தமிழ்நாட்டில் கோழி முட்டை அளவிற்கு மக்கள் சாப்பிடாவிட்டாலும், பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த காடை முட்டையில் ஏராளமான சத்துகள் உள்ளன.
காடை முட்டையில் உள்ள சத்துகள்:
• கலோரிஸ் – 14 கிராம்
• புரோட்டீன் – 1 கிராம்
• கொழுப்பு – 1 கிராம்
• கோளின் – 4 சதவீதம்
• வைட்டமின் ஏ – 2 சதவீதம்
• வைட்டமின் பி12 – 6 சதவீதம்
• இரும்புச்சத்து – 2 சதவீதம்
புரோட்டீன்:
காடை முட்டையில் அதிகளவு புரதச்சத்து உள்ளது. இது நமது உடலில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். இது எலும்புக்கும், தசைக்கும் மிகுந்த வலிமை சேர்க்கும். மேலும், உடலுக்கு ஆற்றலையும் அளிக்கும்.
ரத்தசோகைக்கு எதிரானது:
உடலில் ரத்தத்தில் போதுமான அளவு சிவப்பு செல்கள் இல்லாத நிலையில், ரத்த சோகை ஏற்படும். காடை முட்டையில் இரும்புச்சத்து இருப்பதால் ரத்த சோகை அபாயத்தை குறைக்கும்.
கொழுப்பை சமநிலைப்படுத்துதல்:
காடை முட்டையில் அதிகளவு நன்மை பயக்கும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதயத்திற்கு மிகவும் நல்லது. காடை முட்டையில் உள்ள 60 சதவீத கொழுப்பு நல்ல கொழுப்பு ஆகும். இது உங்கள் உடலில் உள்ள கொழுப்பை சமநிலைப்படுத்த உதவும்.
உடலை சுத்தப்படுத்தும்:
காடை முட்டை உடலின் உள்ளே சுத்தப்படுத்தும் பணியையும் செய்கிறது. காடை முட்டையை சாப்பிடுவதால் அது ரத்தத்தில் உள்ள நச்சுகளை அகற்றுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு:
காடை முட்டையில் ஏராளமான வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ இருப்பதால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
அலர்ஜிக்கு எதிரானது:
காடை முட்டையில் இயற்கையாகவே ஆன்டி அலர்ஜெனிக் இருப்பதால் இது அலர்ஜி எனப்படும் ஒவ்வாமைக்கு எதிராக செயல்படும்.
ALSO RAD | வாத்து முட்டை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?
ஆற்றல் அதிகரிப்பு:
காடை முட்டையில் ஏராளமான வைட்டமின்களும், கார்போஹைட்ரேட்டும் இருப்பதால் அது உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. இது நம்மை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது.
பார்வைக்கு நல்லது:
காடை முட்டையில் ஏராளமான வைட்டமின் ஏ உள்ளது. இது நமது கண்ணுக்கு மிகவும் நல்லது ஆகும். வைட்டமின் ஏ கண்ணுக்கு மட்டுமின்றி இதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்பட மற்ற உறுப்புகளுக்கும் நல்லது ஆகும்.
இத்தனை பயன்களை கொண்ட காடை முட்டையை அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியம் அடையுங்கள்.
ALSO READ | ஒரு புடி புடிக்க வேண்டியததான்..! முட்டையில இவ்ளோ வெரைட்டி இருக்கா? அதுவும் இவ்ளோ சத்தா?