ஒரு குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கு அந்த குழந்தைக்கு அளிக்கப்படும் உணவுதான் முக்கிய காரணியாக அமைகிறது. இதனால், குழந்தைகள் வளரும்போது அவர்களின் உடல்நலத்திற்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்க வேண்டும்.
அவர்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் உணவு பொருட்களை கீழே காணலாம்.
பாதாம்
• பாதாமில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது, இது நினைவாற்றலை அதிகரிக்கிறது.
• பாதாமை காலை அல்லது மாலையில் கொடுக்கலாம், பாதாம் இரவில் கொடுப்பது செரிமான கோளாற்றை உண்டாக்கும்.
• தினமும் 5 முதல் 10 பாதாம் வரை கொடுக்கவேண்டும்,அதிக அளவு வயிற்றுப்போக்கு உண்டாக்கும்.
மீன்
• எப்போதும் ஆரோக்கிமான உணவுகளின் பட்டியலில் மீன் இடம்பெறும்.
• மீனில் வைட்டமின் டி மற்றும் பி12 கால்சியம், பாஸ்பர் நிறைந்துள்ளன,
• எந்த வகையான மீனாக இருந்தாலும் கொடுக்கலாம், ஆனால் முள் அதிக அளவு உள்ள மீனை கட்லெட்,புட்டு போன்ற ஸ்னாக்ஸ் முறையில் கொடுத்தால்,குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்
• வாரம் இருமுறை மீன் கொடுக்கலாம்,
வால்நட்
• குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்க, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு வால்நட் உகந்தது ஆகும்.
• வால்நட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
• வால்நட் குழந்தைகளுக்கு மூளை அல்சைமர் நோய்களைத் வராமல் தடுக்கிறது. தினமும் 3-5 வால்நட் கொடுத்தாலே போதுமானது.
முட்டை
• முட்டை மிகவும் ஆரோக்கிமானது ஆகும். முட்டையில் ஒமேகா 3 கொலஸ்ட்ரால் அமிலங்கள் மற்றும் கொலின் ஊட்டச்சத்து உள்ளது,
• தினமும் ஒரு 1 வேகவைத்த முட்டையை கொடுங்கள், இது குழந்தைகள் ஆக்டிவ்வாக, சுறுசுறுப்பாக இருக்க உதவும்,
பால்
• ஒரு மனிதனின் வளர்ச்சிக்கும். ஆரோக்கியத்திற்கும் பால் மிகவும் முக்கியமானது ஆகும்.
• பாலில் உள்ள வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியம்..
• பாலில் கால்சியம், புரதம், வைட்டமின் மற்றும் தாதுக்கள் உள்ளன,
• தினமும் இரவில் ஒரு டம்ளர் பால் குடித்தால் குழந்தைகளுக்கு நல்ல தூக்கம் வரும்
மேலே குறிப்பிட்டவற்றை முறையாக எடுத்துக்கொள்ளவும். வளரும் குழந்தைகளுக்கு ஏதேனும் உடல்நலக்குறைவு இருந்தால் மருத்துவரை அணுகி முறையான ஆலோசனை பெற்று மேலே கூறியவற்றை சாப்பிடலாம். அதேசமயம் அளவாக அளிக்க வேண்டும்
ALSO READ | அதிகரிக்கும் கோடை வெயில்.. மக்களுக்கு மின்வாரியம் சொன்ன முக்கிய அட்வைஸ்!