இன்றைய இணையதள மற்றும் பாஸ்ட்புட் காலகட்டத்தில் நமக்கு சவாலாக இருப்பது ஆரோக்கியத்தை கடைபிடிப்பதே ஆகும். இதை கடைபிடிக்க நாம் சில உணவுப்பழக்கங்களை கட்டுக்கோப்புடன் கடைபிடிப்பது நல்லது ஆகும். உங்கள் ஆரோக்கியத்திற்கு எப்போதுமே வலுசேர்க்கும் உணவுகளுடன் பழங்கள், கீரைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் உடல் வலிமை அதிகரிக்க கீழே உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது ஆகும்.
வாழைப்பழம் :
வாழைப்பழத்தை தினமும் பாலுடன் சேர்த்து சாப்பிடுவதால், உடல் வலிமை அதிகரிக்கும். ஆண்கள் கண்டிப்பாக வாழைப்பழத்தை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
பூண்டு :
உணவில் பூண்டை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது ஆகும். பூண்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் அதிகளவில் இருப்பதால், இது ஆண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடல் வலிமை அதிகரிக்க தினமும் வெறும் வயிற்றில் பூண்டை உட்கொள்ளலாம். அதாவது 4 பற்கள் பூண்டை வெதுவெதுப்பான நீரில் சாப்பிடவும். இப்படி செய்வதன் மூலம் பல நோய்களில் இருந்து விடுபடலாம்.
நட்ஸ் :
காலை சிற்றுண்டியாக நட்ஸ்களை எடுத்து கொள்ளலாம். இதில் அதிகப்படியான புரோட்டீன்கள் உள்ளதால் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு ஆண்களுக்கு நல்ல உணவு பொருளாகவும் இருக்கும். மேலும் இது நீரிழிவு நோயினை கட்டுப்படுத்த உதவுகிறது.
ஆப்பிள் :
சரும ஆரோக்கியத்திற்கு ஆப்பிள் மிகவும் நல்லது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் ஏ உடன் பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருக்கின்றன. இதனால், ஆப்பிளை அடிக்கடி சாப்பிட்டால் சருமத்தின் வயதான தோற்றம் குறைந்து இளமையான தோற்றம் பெற முடியும்.
மேற்கண்ட உணவுகளை சரிசம விகிதத்தில் சாப்பிட்டு வந்தாலே நமது ஆரோக்கியம் சீராக இருக்கும். இந்த உணவுகளுடன் போதிய உடற்பயிற்சியும் செய்து வந்தால் உடல்நலன் நன்றாக இருக்கும்.
ALSO READ | கடையிலே தொடர்ச்சியா சாப்பிட்றீங்களா..? ப்ளீஸ் இதை படிங்க..!