Tuesday, May 23, 2023
HomeLifestyleNutritionஒரு புடி புடிக்க வேண்டியததான்..! முட்டையில இவ்ளோ வெரைட்டி இருக்கா? அதுவும் இவ்ளோ சத்தா?

ஒரு புடி புடிக்க வேண்டியததான்..! முட்டையில இவ்ளோ வெரைட்டி இருக்கா? அதுவும் இவ்ளோ சத்தா?

மனிதர்களின் ஆரோக்கியமான உணவுகளில் எப்போதும் முட்டைக்கு என்று தனி இடம் உண்டு. ஏராளமான புரதச்சத்துக்களும், வைட்டமின்களும் அடங்கியதுதான் இந்த முட்டை. நாம் பெரும்பாலும் கோழி முட்டைகளே சாப்பிட்டிருப்போம். உலகம் முழுவதும் பிரபலமான உணவு வகைகளுக்குள் வரும் 10 முட்டைகளை கீழே காணலாம்.

1. கோழி முட்டைகள் | Chicken Egg

இந்தியாவில் பெரும்பாலும் வீடுகளிலும், உணவங்களிலும் பயன்படுத்தப்படுவது கோழி முட்டைகளே. வர்த்தகத்திற்காக பிராய்லர் கோழி முட்டைகளும், வீடுகளிலே வளர்க்கப்படும் நாட்டுக்கோழி முட்டைகளும் பெரும்பாலும் உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் புரோட்டீன், கால்சியம், ஜிங்க் உள்ளன.

Eggs Types and Nutritions in Tamil Different Types of Eggs you can Eat
Chicken Eggs

2. காடை முட்டைகள் | Quail Egg

காடை பறவையின் முட்டையே காடை முட்டைகள் ஆகும். கோழி முட்டையுடன் ஒப்பிடும்போது சற்று சிறியளவில் இருக்கும். இதில் வைட்டமின் டி, பி12 உள்பட ஏராளமான புரதங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மிகவும் எளிதாகவே காடை முட்டைகள் கிடைக்கும்.

Eggs Types and Nutritions in Tamil Different Types of Eggs you can Eat
Quail Egg

3. வாத்து முட்டைகள் | Duck Egg

கோழி முட்டையை காட்டிலும் உருவத்தில் பெரியளவில் காணப்படுவது வாத்து முட்டைகள். வாத்து கறியும் பல இடங்களில் உணவாக வழங்கப்படுகிறது. வாத்து முட்டையில் ஏராளமான கொழுப்புகளும், புரதங்களும் உள்ளது. இதில் வைட்டமின் பி ஏராளமாக உள்ளது. இதன் ஓடுகள் மிகவும் தடிமனாக இருக்கும்.

ALSO READ | வாத்து முட்டை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

4. மீன் முட்டை | Cavier

மீன் முட்டைகளை கேவியர் என்று கூறுவார்கள். இதில் ஆண்டி – ஆக்சிடன்கள் அதிகளவில் உள்ளது. உலகம் முழுவதும் பரவலாக கிடைக்கக்கூடிய உணவுப்பொருள் இதுவாகும்.

Eggs Types and Nutritions in Tamil Different Types of Eggs you can Eat
Cavier

5. அன்னப்பறவை முட்டை | Goose Egg

வாத்து போன்ற தோற்றம் கொண்ட பறவை அன்னப்பறவை ஆகும். இதன் முட்டை வாத்து முட்டை, கோழி முட்டையை காட்டிலும் அளவில் பெரியது. இதில் ஏராளமான புரதங்கள் உள்ளது. அன்னப்பறவைகள் ஆண்டிற்கு 40 முட்டைகள் இடுகின்றன.

Eggs Types and Nutritions in Tamil Different Types of Eggs you can Eat
Goose Eggs

6. வான்கோழி முட்டைகள் | Turkey Egg

வான்கோழி முட்டைகள் அளவில் வாத்து முட்டைகளைப் போன்று இருக்கும். இதன் முட்டைகள் வெள்ளை நிறைத்தில் இருக்கும். இதில் ஏராளமான கால்சியம் உள்ளது. ஆண்டுக்கு 100 முட்டைகள் வரை வான்கோழிகள் இடும். இதன் கறியிலும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.

Eggs Types and Nutritions in Tamil Different Types of Eggs you can Eat
Turkey Egg

7. ஈமு முட்டைகள் | Emu Egg

அளவில் பெரிய தோற்றத்தை கொண்டது ஈமு கோழிகள். தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈமு கோழிப்பண்ணைகள் அதிகளவில் காணப்பட்டது. ஈமு கோழி முட்டைகள் 1 கிலோ எடை கொண்டது. இதன் முட்டைகள் கருமை நிறத்தில் காணப்படும்.

Eggs Types and Nutritions in Tamil Different Types of Eggs you can Eat
Emu Eggs

8. ஹில்சா முட்டைகள் | Hilsa Egg

ஹில்சா என்பது மீன் ஆகும். வங்காளதேசம், கிழக்கு இந்தியாவில் பெரும்பாலும் காணப்படும் இந்த மீன்களில் இருந்து எடுக்கப்படும் இந்த முட்டைகளில் ஓமேகா அதிகளவில் காணப்படுகிறது. ஏராளமான புரதச்சத்துக்களும் உள்ளது.

Eggs Types and Nutritions in Tamil Different Types of Eggs you can Eat
Hilsa Fish Eggs

9. ஆஸ்ட்ரிச் முட்டை | Ostrich Egg

உலகிலேயே மிகப்பெரிய பறவையான நெருப்புக்கோழியின் முட்டை மற்ற பறவைகளின் முட்டையை காட்டிலும் மிகப்பெரியது. இதன் ஓடுகள் உடைப்பதற்கே மிகவும் கடினமானது ஆகும். ஒவ்வொரு முட்டையும் தலா 2 கிலோ எடை இருக்கும். கோழி முட்டையை காட்டிலும் 20 மடங்கு தடிமன் ஆனது. கோழி முட்டைகளில் உள்ளது போலவே இதில் புரதங்கள், கொழுப்புகள் உள்ளது.

Eggs Types and Nutritions in Tamil Different Types of Eggs you can Eat
Ostrich Eggs

10. பாண்டம் முட்டைகள் | Bantam Egg

பாண்டம் பறவை என்பது கோழியும், புறாவும் கலந்த கலவை போன்ற தோற்றம் கொண்டது. இதன் முட்டைகள் மிகவும் சிறிய அளவில் இருக்கும். இதன் முட்டைகளில் ஏராளமான இரும்புச்சத்துக்கள் உள்ளது.

Eggs Types and Nutritions in Tamil Different Types of Eggs you can Eat
Bantams Eggs