Friday, May 26, 2023
HomeLifestyleNutritionடெய்லி காலையில டீ, காபி தான் குடிக்குறீங்களா..? இனிமே இதை ட்ரை பண்ணுங்க!

டெய்லி காலையில டீ, காபி தான் குடிக்குறீங்களா..? இனிமே இதை ட்ரை பண்ணுங்க!

உலகில் பலரும் காலை எழுந்தவுடன் டீ மற்றும் காபியுடன் அந்த நாளை தொடங்குவதை வழக்கமாக வைத்துள்ளோம். குறிப்பாக, இந்தியாவில் டீ, காபி குடிப்பவர்களின் எண்ணிக்கை கோடிகளைத் தாண்டும். சிலர் காலையில் எழுந்தவுடன் வெந்நீர் அல்லது வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது ஆகியவற்றை செய்வதுண்டு. ஆனால் காலை எழுந்தது இந்த டீ, காபி குடிப்பதற்கு மாற்றாக சில உணவுகள் இருக்கின்றன.

காலையில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவானது வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வதால் அந்த நாளை அது சுறுசுறுப்பாக்குவதுடன், நமது உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் மாற்றும் வகையில் இருக்க வேண்டும்.

ஊறவைத்த பாதாம் பருப்பு

பாதாம் பருப்பை (15 -25 எண்ணிக்கை) முதல் நாள் இரவே ஊறவைத்து அடுத்த நாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தோலை உரித்து விட்டு சாப்பிடலாம். இன்சுலின் ரெசிஸ்டன்ஸ், பிசிஓஎஸ், நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள், போதிய தூக்கமின்மை, கருவளம் குறைவாக இருப்பது போன்ற பிரச்சினை உள்ளவர்கள் இப்படி பாதாமை ஊற வைத்து சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது ஆகும்.

ஊறவைத்த உலர் திராட்சை

காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஊறவைத்த உலர்திராட்சையும் அதன் தண்ணீரையும் சாப்பிடுவதும் மிகவும் நல்லது. 15 முதல் 25 வரை உலர் திராட்சை பழங்களை நன்கு கழுவிவிட்டு ஒரு டம்ளர் தண்ணீரில் இந்த உலர் திராட்சை பழங்களை ஊறவிடுங்கள். இதை அடுத்த நாள் காலையில் எடுத்து சாப்பிட்டுவிட்டு அந்த நீரையும் குடிக்க வேண்டும். பெண்கள் மாதவிடாய் காலத்தையும் மெனோபஸ் காலகட்டத்தையும் நெருங்கும்போது உடலில் எனர்ஜியே இல்லாமல் இருப்பது போல இருக்கும். அதுபோன்ற நாட்களில் ள் காலை எழுந்ததும் இந்த ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

வாழைப்பழம்

காலை எழுந்ததும் டீ, காபிக்கு பதிலாக வாழைப்பழம் சாப்பிடுவது நம்முடைய உடலுக்கு நிறைய சுறுசுறுப்பை கொடுக்கும் அதேபோல வாழைப்பழம் ஜீரணத்தை மேம்படுத்தும். வாழைப்பழமானது நல்ல மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. இரவில் தூங்கும் முன் வாழைப்பழம் சாப்பிட்டு படுப்பவர்களைத்தான் பார்த்திருப்போம். ஆனால், காலை எழுந்ததும் வாழைப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. குறிப்பாக சாப்பிட்டவுடன் ஏதேனும் இனிப்பு சாப்பிட வேண்டும் என்கிற ஆர்வத்தையும் தூண்டுதலையும் இந்த வாழைப்பழம் குறைக்கும்

அனைத்து உணவுகளையும் ஒரே நாளில் காபி – டீ குடிக்கும் முன்பாக எடுத்துக் கொள்ள முடியாது. மேற்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை பின்தொடர்வது நல்லது. உங்கள் உடலில் ஏதேனும் நோய்கள் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்துவிட்ட இந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.