இன்றைய காலத்தில் மனிதனின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக செல்போன் மாறிவிட்டது என்றால் அது மிகையாகாது. ஸ்மார்ட்போனிலே ஒட்டுமொத்த உலகத்தையும் நம் உள்ளங்கைக்கு கொண்டு வந்துவிட்டோம் என்று சொல்லும் அளவிற்கு இணையமும் வளர்ந்துவிட்டது.
எந்தவொரு செயலும், உணவும் அளவுக்கு அதிகமாக மிஞ்சும்போது அது இன்னல்களை தரும். ஒரு காலத்தில் பெரும்பாலான குழந்தைகள் தொலைக்காட்சிக்கு அடிமையாக இருந்தனர். ஆனால், இன்று பெரும்பாலான குழந்தைகள் ஸ்மார்ட்போனிற்கு அடிமையாக உள்ளனர் என்றால் அது மிகையாகாது.அதிகளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் ஏராளமான பிரச்சினைகளை கீழே காணலாம்.
பல மணி நேரங்கள் ஒரே இடத்தில் ஆடாமல், அசையாமல் உட்கார்ந்தபடி ஸ்மார்ட் போனில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றால்…உங்கள் குழந்தைகள் செல்போனில் நீண்ட நேரம் செலவிடுகிறார்களா? இவ்ளோ ஆபத்து இருக்கா?
இன்றைய காலத்தில் மனிதனின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக செல்போன் மாறிவிட்டது என்றால் அது மிகையாகாது. ஸ்மார்ட்போனிலே ஒட்டுமொத்த உலகத்தையும் நம் உள்ளங்கைக்கு கொண்டு வந்துவிட்டோம் என்று சொல்லும் அளவிற்கு இணையமும் வளர்ந்துவிட்டது.
எந்தவொரு செயலும், உணவும் அளவுக்கு அதிகமாக மிஞ்சும்போது அது இன்னல்களை தரும். ஒரு காலத்தில் பெரும்பாலான குழந்தைகள் தொலைக்காட்சிக்கு அடிமையாக இருந்தனர். ஆனால், இன்று பெரும்பாலான குழந்தைகள் ஸ்மார்ட்போனிற்கு அடிமையாக உள்ளனர் என்றால் அது மிகையாகாது.
அதிகளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் ஏராளமான பிரச்சினைகளை கீழே காணலாம்.
- பல மணி நேரங்கள் ஒரே இடத்தில் ஆடாமல், அசையாமல் உட்கார்ந்தபடி ஸ்மார்ட் போனில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றால் முதுகு எலும்பு மற்றும் தசைகள் பாதிப்படைகின்றன.
- செல்போன் பயன்படுத்திக் கொண்டு குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே அடங்கிக் கிடப்பதால், வெயிலில் விளையாடுவதால் கிடைக்கும் அவசியமான வைட்டமின்கள் எதுவுமே அவர்களுக்கு கிடைப்பதில்லை.
- உடல் உழைப்பே இல்லாமல் செல்போனிலே விளையாடிக் கொண்டிருப்பதாலும், எந்த விளையாட்டிலும் ஈடுபடாததால் உடல் பருமன் அதிகரிக்கிறது.
- ஒளிரும் திரையை பல மணி நேரம் பார்ப்பதால், கண்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
- அதிக வெளிச்சம் கொண்ட செல்போன் ஸ்கிரினையே பார்த்துக் கொண்டிருப்பதால் விழிகள் உலர்ந்து போய் பார்வைத்திறன் பாதிக்கப்படுகிறது.
- குழந்தைகள் பெற்றோர்களை விடுத்து செல்போனிலே மூழ்கும் அபாயம் ஏற்படும்.
- செல்போனில் வீடியோக்கள் பார்ப்பதற்கும், கேம்ஸ் விளையாடுவதற்கும் அதிகளவு நேரங்களை குழந்தைகள் செலவழிப்பதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வம் குறைந்துவிடும்.
இதனால், குழந்தைகளுக்கு செல்போனை அதிகளவு பயன்படுத்த பழக்க வேண்டாம்.
ALSO READ | படிச்சது மறந்து போய்டுதா..? ஞாபகத்துலயே இருக்க மாட்டேங்குதா..? கவலையை விடுங்க..!