இன்றைய தலைமுறையினரின் வாழ்வியல் மாற்றங்களால் , 30 வயதை கடந்த பெரும்பாலானவர்கள் பல உடல் ரீதியான பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அவற்றுள் அதிகமான மக்கள் பாதிக்கப்படும் பிரச்சனைககளில் சில, உயர் இரத்த அழுத்தம், தைராய்டு,PCOs .
உண்ணும் உணவே மருந்து என்பதற்கு ஏற்ப, நாம் அன்றாட உண்ணும் உணவின் மூலம் இவ்வகை உடல் நலக்குறைகளை தவிர்க்கவோ, அதன் வீரியத்தை கட்டுப்படுத்தவோ முடியும்.
தைரொய்ட்
ஆண்களை விட பெண்களுக்கு தான் தைரொய்ட் பிரச்சனை அதிகம் வருகிறது. எட்டு பெண்களில் ஒருவர் தனது வாழ்நாளில் தைராய்டு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். தைரொய்ட் சுரப்பியில் சுரக்கும் ஹார்மோன் அளவு அதிகமானாலும் குறைத்தாலும் , அது நம் உடல் நலத்தை பாதிக்கும்.தைரொய்ட் சுரப்பி சீராக இயங்க அயோடின் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது
பால் பொருட்கள், கோழி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மீன் மற்றும் அயோடைஸ் உப்பு போன்றவைகளில் அயோடின் அதிகமாக உள்ளது. தைராய்டு ஹார்மோன் உற்பத்தியை சமநிலையில் வைத்திருக்க சரியான அளவு அயோடின் தேவைப்படுகிறது. அயோடின் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவருடன் கலந்துரையாடி எச்சரிக்கையுடன் பயன்படுத்தவும்.
Also Read: கடக்நாத் எனும் கருங்கோழியில் அப்படி என்ன ஸ்பெஷல்.. வாங்க ஒரு புடி புடிப்போம்!
சில உணவுகளில் தைராய்டு ஹார்மோன் உற்பத்தியைக் குறைக்கக் கூடிய கோட்ரோஜன்கள் உள்ளன. அவற்றுள் காலிஃபிளவர்,ப்ரோக்கோலி,முட்டைக்கோஸ், முள்ளங்கி ஆகியவை அடங்கும். ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்கள் இந்த உணவுகளை குறைந்த அளவு எடுத்துக்கொள்ளுதல் அல்லது முற்றிலும் தவிர்த்தல் நல்லது.
PCos சினைப்பை நீர்கட்டிகள் :
தைரொய்ட் பிரச்சனை இருக்கும் பெண்கள் சந்திக்கும் ஒரு பொதுவான பாதிப்பு பி.சி.ஓ.எஸ் (PCos ) எனும் சினைப்பை நீர்கட்டிகள். முறையான உடற்பயிற்சி , சரியான உணவு பழக்கவழக்கம் மேற்கொள்ளுதல் மூலம் இத்தகைய பாதிப்பு வராமல் தவிர்க்க முடியும்.
பச்சை காய்கறிகள் , கீரைகள், பழங்கள் , அக்ரூட் பருப்புகள் ( Walnuts), ஆளிவிதை ( flax seeds ), பாதாம் , கோழி இறைச்சி, சால்மன் மீன், பருப்பு வகைகள் மற்றும் பயறு போன்ற தாவர புரதங்கள், வெந்தயம் போன்றவைகளை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பேஸ்ட்ரிகள், வெள்ளை ரொட்டி, பிஸ்கட், சர்க்கரை பானங்களான சோடாக்கள் மற்றும் எனர்ஜி பானங்கள் மற்றும் ஜங்க்ஃபுட் போன்றவற்றை தவிர்த்தல் வேண்டும். முடிந்தவரை இனிப்பு , மாவுச்சத்துள்ள உணவுகளை குறைத்து நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்வதையும் பழக்கமாக்கிக் கொள்வது நல்லது.
உயர் இரத்த அழுத்தம் :
இதய நோய்கள் அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிக கொழுப்பு மற்றும் மாவுச்சத்துள்ள உணவை அளவோடு உண்ணுதல் நல்லது.ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அவர் உண்ணும் உப்பின் அளவை விட அவர் உட்கொள்ளும் கார்போஹைட்ரெட்டின் அளவு மற்றும் தரத்தை கவனிப்பது முக்கியம்.
இயற்கையாகவே உணவுகளில் சிறிய அளவில் தான் சோடியம் இருக்கும் , ஆனால் உணவு தயாரித்தல் மற்றும் பதப்படுத்தும் போது சேர்க்கப்படுகிற . சோடியமின் அளவு பெரும்பாலும் அதிகமாக இருக்கும்.
ஏனெனில், இது உணவு கெட்டுப் போகாமல் இருக்க சேர்க்கப்படுகிறது. ஆகவே டின்கள் மற்றும் பாக்கெட்டில் அடைக்க பட்ட உணவை தவிர்த்தல் அவசியம்.
பொட்டாசியம், உடலில் உள்ள அதிகப்படியான சோடியத்தை சிறுநீர் மூலம் வெளியேற்ற உதவுகிறது. இது உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. வாழைப்பழம், பாலக் கீரைகளில் பொட்டாசியம் நிறைந்துள்ளது.