Friday, May 26, 2023
HomeLifestyleமேட்ரிமோனியல் சைட்டில் வரன் தேடுவரா நீங்கள்? அப்போ இதையெல்லாம் செய்யாதீங்க..!

மேட்ரிமோனியல் சைட்டில் வரன் தேடுவரா நீங்கள்? அப்போ இதையெல்லாம் செய்யாதீங்க..!

ஆண், பெண் இருவருக்கும் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயம். உறவினர்கள் மூலமாக தெரிந்தவர்கள் மூலமாக வரன் பார்த்து வந்ததை இன்னும் எளிதாக்கும் விதமாக மேட்ரிமோனியல் இணையதளம் மூலமாக பலரும் தங்களுக்கான வாழ்க்கை துணையை தேடி வருகின்றனர்.

அதேசமயத்தில், மேட்ரிமோனியல் சைட் மூலமாக வரன் தேடும்போது மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். மேட்ரிமோனியல் இணையதளங்கள் மூலமாக வரன் தேடும்போது என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை கீழே காணலாம்.

மேட்டரிமோனியலில் நிறைய இலவச புரைபல்கள் இருக்கும். அவற்றில் பெரும்பாலும் ஏமாற்றுக்காரர்களாக இருக்க வாய்ப்பு உண்டு. அதனால் இலவச ப்ரொபைல்களை நம்பாதீர்கள்.

எந்த காரணத்தைக் கொண்டும் உங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் நண்பர்களாக்கிக் கொள்வது, உங்களுடைய நண்பர்களை அறிமுகப்படுத்துவது, அதில் சாட்டிங்கில் ஈடுபடுவது போன்றவற்றை தவிர்த்துவிடுவது நல்லது ஆகும்.
மேட்ரிமோனியலில் அறிமுகமாகும் நபருடன் திருமணத்துக்கு முன்பாக அல்லது நிச்சயதார்த்ததுக்கு முன்பு வரை அவர் உங்களுடைய வாழ்வில் புதிய நபர் மட்டுமே என்பதால் தேவையற்ற தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். உங்களுடைய தனிப்பட்ட சொந்த விவகாரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

மேட்ரிமோனியல் மூலமாக அறிமுகமான நபருடன் எந்த சூழலிலும் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடாது. எந்த சூழ்நிலையிலும், தெரியாத இடத்தில் சந்திக்க சம்மதிக்காதீர்கள். மேட்டரிமோனியல் மூலம் அறிமுகமாகும் வரனை முதன் முறையாக சந்திக்கப் போகும்போது சந்திக்கும் இடம் குறித்த எல்லா விவரங்களையும் இரண்டு வீட்டாருக்கும் தெரியப்படுத்தி விட்டு செல்வது அவசியம். தனியாக போகாமல் கூட உங்களுடைய நண்பர்கள் யாரையாவது உடன் அழைத்துச் செல்லுங்கள்.

மேட்ரிமோனியல் மூலமாக ஆயிரக்கணக்கானோருக்கு நல்ல வாழ்க்கை அமைந்து வருகிறது. அதேசமயம் பல மோசடிக்கும்பல்கள் நூதன மோசடிகளில் ஈடுபட மேட்ரிமோனியல் இணையதளத்தையும் பயன்படுத்தி வருகின்றனர். அதனால், மணமகள், மணமகன் தேடுவோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

ALSO READ | நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா..? இந்த டிப்சை ஃபாலோ பண்ணுங்க..!