Friday, May 26, 2023
HomeLifestyleபுது வீட்டுல பால் காய்ச்சுறது ஏன் தெரியுமா..? இவ்ளோ விஷயங்கள் இருக்கா?

புது வீட்டுல பால் காய்ச்சுறது ஏன் தெரியுமா..? இவ்ளோ விஷயங்கள் இருக்கா?

சொந்த வீடு என்பது நம் அனைவரின் மிகப்பெரிய கனவாகும். பார்த்து, பார்த்து கட்டிய வீட்டிற்கு கிரகப்பிரவேச நிகழ்ச்சியின்போது பால் காய்ச்சுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

புதியதாக கட்டி குடிபுகும் வீட்டில் பால் காய்ச்சி குடியேறுவது ஏன் தெரியுமா?

• புதியதாக நாம் சொந்த வீடு கட்டி குடியேறும்போது முதன்முதலாக பாலை தான் காய்ச்ச வேண்டும். அதிலும் பசுமாட்டு பாலை காய்ச்சினால் சிறந்தது. வாடகை வீட்டிற்கு செல்பவர்களும் பால் காய்ச்சி விட்டு செல்வது சிறந்தது ஆகும்.

• முப்பத்து முக்கோடி தேவர்கள் வாசம் செய்கின்ற பசுமாட்டின் பாலை காய்ச்சினால் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.

• நகர்ப்புறங்களில் பசுவில் இருந்து கறக்கப்பட்ட பால் கிடைப்பது கடினம் என்பதால் பாக்கெட் பால் காய்ச்சப்படுகிறது.

• வீட்டில் முதன்முதலாக பாலை காய்ச்சும்போது, அந்த வீட்டில் இருக்கக்கூடிய துர்தேவதைகள் கூட நல்ல தேவதைகளாக மாறிவிடுவார்கள் என்பது நம்பிக்கை. இதற்காக தான் முதலில் பாலை காய்ச்சப்படுகிறது.
பால் பொங்கி வழிவதில் இவ்வளவு பலனா?

• மேற்கு திசையில் பொங்கினால் கடன் பிரச்சனைகள் அனைத்தும் விரைவாக தீரும்.

• தெற்கு திசையில் பொங்கினால் எந்த பாதிப்பும் கிடையாது

• புது வீட்டில் நாம் காய்ச்சும் பாலானது, வடக்கு திசையில் பொங்கி வழிந்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருந்து பணவரவு அதிகரிக்கும்.

• கிழக்கு திசையில் பொங்கி வழிந்தால் சொந்த தொழில் அல்லது அலுவலக பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.