மனிதனின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தாம்பத்ய வாழ்க்கை தவிர்க்க முடியாத பங்கு வகிக்கிறது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருப்பதில்லை. அதற்கு பிரதான காரணம் ஆரோக்கியப் பிரச்சினைகள்தான்.
உங்களுக்கு உடல்நலம் ஆரோக்கியமாக இருந்தாலும், உங்கள் தாம்பத்ய வாழ்க்கை மந்தமாக இருக்கிறது என்றால் கீழ்க்கண்ட விஷயங்கள் உங்களையும் மீறி உங்கள் தாம்பத்ய வாழ்க்கையை பாதித்துக் கொண்டிருக்கும்.
தாமதமாக உணவு சாப்பிடுவது:
தாமதமாக இரவு உணவை தம்பதிகள் சாப்பிடும்போது, அதிகமாகச் சாப்பிட்டுவிட்டு, நள்ளிரவு சிற்றுண்டிகளைச் சாப்பிடும்போது, அவை உங்களை சோர்வாக மாற்றுகிறது. இறுதியில், நீங்கள் தூங்கவே விரும்புகிறீர்கள். நீங்கள் மிதமான அளவில் சாப்பிடும் போது, நீங்கள் அதிக ஆற்றலைப் பெறுவதற்கும், உடலுறவு கொள்வதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது.
செல்போனுடன் நேரத்தை செலவிடுதல்:
வாழ்க்கைத் துணையான நீங்கள் இருவரும் படுக்கை அறையில் எப்போதும் ஃபோனுடனேயே நேரத்தை செலவழித்தால், உங்கள் உறவில் நெருக்கம் ஒருபோதும் இருக்காது. நீங்கள் ஒன்றாக இருக்கும்போது உங்கள் உணர்ச்சிகள் பிரிக்கப்படக்கூடாது. செல்போன்களில் கவனம் செலுத்தும்போது தாம்பத்ய வாழ்க்கை பாதிக்கக்கூடும். இதனாலே பல தம்பதிகள் குறைவாகவே உடலுறவு கொள்கிறார்கள்.
செல்லப்பிராணியுடன் தூங்குவது:
செல்லப்பிராணியை ஒருபோதும் படுக்கையறைக்குள் அனுமதிக்காதீர்கள். உடலுறவு என்பது ஒரு சிறந்த டென்ஷன் நிவாரணி. தம்பதிகள் இருவரும் உடலுறவில் ஈடுபடும்போது எந்தவொரு இடையூறும் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால், தம்பதிகளுக்கு இடையேயான தாம்பத்ய நேரத்தின்போது செல்லப்பிராணிகளுக்கு டாடா சொல்ல வேண்டும்.
அதிகமாக மது அருந்துவது:
உங்களுடைய அந்தரங்க வாழ்க்கை பாதிக்கப்படுவதற்கு மது முக்கிய காரணம். மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட மக்கள் அடிக்கடி மது அருந்துகிறார்கள், ஆனால் அது அவர்களைச் சோர்வடையச் செய்யும். அதிகமாக மது அருந்துவது உடலுறவின்போது உச்சக்கட்டத்தை அடைவதை கடினமாக்கும்.
மேற்கண்ட விஷயங்களை சரி செய்துவிட்டு உறவில் ஈடுபடுங்கள். உங்கள் தாம்பத்ய உறவு மறக்க முடியாத மகிழ்ச்சி தரும் வகையில் அமையும்.