Monday, May 29, 2023
HomeLifestyleஉங்களுக்கு எப்போ கல்யாணம் ஆகும்னு தெரிஞ்சுக்கனுமா..? அப்போ இதை படிங்க..!

உங்களுக்கு எப்போ கல்யாணம் ஆகும்னு தெரிஞ்சுக்கனுமா..? அப்போ இதை படிங்க..!

ஆன்மீகத்தில் ஒருவரின் வாழ்க்கை எப்படி அமையப்போகிறது என்பதையும், அவரது எதிர்காலம், திருமண வாழ்வு யோகம் எப்படி எல்லாம் இருக்கப்போகிறது என்பதை அவரது கை ரேகை வைத்தே எளிதாக கணிக்க முடியும். கைரேகை ஜோதிடத்தை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம். இதை நன்றாக அறிந்த ஜோதிட பெரியோர்களிடம் பார்த்தால் நாம் சரியாக பார்க்க முடியும்.
தற்போது, கை ரேகையை வைத்து திருமண யோகம் எப்படி எல்லாம் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

  • சுண்டு விரலுக்கும், இதய ரேகைக்கும் இடையே உள்ள ரேகை தான் திருமண ரேகைகள். இதய ரேகையில் இருந்து சுண்டுவிரலின் அடித்தள பகுதிகளை வைத்து ஒருவருக்கு எந்த வயதில் திருமணம் நடைபெறும் என்பதை பற்றி கூற முடியும்.
  • திருமண ரேகையானது இதய ரேகைக்கு அருகில் இருந்தால் 20 வயதிலும், நடுவில் இருந்தால் 25-30 வயதிற்குள்ளும், சுண்டுவிரலுக்கு அருகில் இருந்தால் 35 வயதிற்கு மேலும் திருமணம் நடைபெறும்.
  • அடர்த்தியான மற்றும் ஒரே நீளமுள்ள இரண்டு திருமண ரேகைகள் இருந்தால், அவர்களுக்கு இரண்டு திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது.
  • நான்கு, ஐந்து திருமண ரேகைகள் இருப்பவர்களுக்கு நான்கு, ஐந்து திருமணம் நடக்காது. இவர்கள் அன்பானவர்களாகவும், அதிக முறை காதலில் தோல்வியை சந்தித்தவர்களாகவும் இருப்பார்கள்.
  • சிறு ரேகைகள் திருமண ரேகைக்கு குறுக்கே சென்றால், இவர்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும்.
  • சுண்டுவிரலுக்கும், இதய ரேகைக்கும் இடையே ஒரு ரேகை குட்டையாகவும், அடர்த்தியாகவும் இருந்தால் காதல் வாழ்க்கையில் முறிவு ஏற்படும்.
  • திருமண ரேகை கீழ் நோக்கி வளைந்து இருந்தால் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
  • ஒரே ஒரு நீளமான திருமண ரேகை உங்கள் கையில் இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். உங்களின் திருமண வாழ்க்கை வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக நீடித்கும்.

ALSO READ | பெற்றோர்களே ப்ளீஸ் படிங்க.! முன்கூட்டியே பெண்கள் பருவம் அடைகிறார்களா..?