நம் உடலில் போதுமான கனிம இரும்பு சத்து இல்லையெனில் இரும்பு சத்து குறைபாடு ஏற்படும். உடலில் ஹீமோகுளோபின் உருவாக்க இரும்பு சத்து மிகவும் அவசியம் ஆகும். இதுவே உடலில் இரத்த சிவப்பு அணுக்களாகி உடல் முழுக்க ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது.
தேவையான அளவு ஹீமோகுளோபின் இல்லையெனில் உடலின் தசைக்கள் மற்றும் திசுக்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது. இதனால் அவை சீராக இயங்காமல் போகும் வாய்ப்புகள் உள்ளன. இந்த குறைபாடு அனீமியா என அழைக்கப்படுகிறது.
அனீமியாக்களில் பலவகை உண்டு. எனினும், இரும்பு சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் அனீமியா உலகம் முழுக்க பிரபலமாக இருக்கிறது. உடலில் இரும்பு சத்து குறைபாடு ஏற்படுவதற்கான முக்கிய காரணிகள் பின்வருமாறு:
- அன்றாட உணவில் இரும்பு சத்துள்ள உணவுகளை நிராகரித்தல் அல்லது உட்கொள்ளாமல் இருத்தல்
- அலர்ஜி
- கருவுற்றிருக்கும் போது அதிகளவு இரும்பு சத்துக்களை சேர்த்துக் கொள்ளாமல் இருத்தல்
- மாத விடாயின் போது அதிக இரத்தம் வெளியேறுதல்
இரும்பு சத்து குறைபாட்டின் முக்கிய அறிகுறி உடல் வேகமாக சோர்வு ஏற்படுவது தான். உடலில் போதுமான இரும்பு சத்து இல்லாதவர்களுக்கு இந்த அறிகுறி ஏற்படும்.
ஹீமோகுளோபின் குறையும் போது திசு மற்றும் தசைகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் குறையும், இதனால் உடலில் சக்தி வேகமாக குறையும்.
மேலும் இதயமும் உடல் முழுக்க ஆக்ஸிஜனை கடத்த அதிகமாக உழைக்க வேண்டும், இதனாலும் உடல் சோர்வு அதிகமாகும்.
அன்றாட வாழ்வில் கடுமையான உழைப்பு, நவீன வாழ்க்கை முறை மாற்றம் போன்ற காரணங்களால் இரும்பு சத்து குறைபாட்டை இந்த அறிகுறியை மட்டும் எடுத்துக் கொண்டு கணிப்பது சிரமமான காரியம் தான்.
எனினும், இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்களில் பெரும்பாலானோர் உடல் சோர்வு, கவனக்குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
நிறம் மாற்றம்
இரும்பு சத்து குறைபாடு ஏற்படும் பட்சத்தில் கண்களின் நிறம் சற்றே வெளிர் தன்மைக்கு மாறும். உடலில் இரத்த சிவப்பு அணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் தான் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை கொடுக்கிறது. இதனால் இரத்தத்தின் நிறம் மாறும்.
அந்த வகையில் உடலில் இரும்பு சத்து குறைந்தால் சருமத்தின் ஆரோக்கியமான நிறம் மாறும். இதை வைத்து உடலில் இரும்பு சத்து குறைபாடு உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டால் நிறம் குறைவதுடன், உடல் சற்றே சூடாகவும் இருக்கும்.
இந்த வகையில் குறைபாடு உள்ளவர்களுக்கு உடல் முழுக்கவோ அல்லது முகம், ஈர், உதடுகளின் உள்புறம், நகம் உள்ளிட்டவைகளின் நிறம் மாறும். இரும்பு சத்து குறைபாடு மேலே குறிப்பிட்ட அறிகுறிகளை மட்டும் நம்பி உறுதிப்படுத்த முடியாது. இதனால் இரத்த பரிசோதனை செய்து கொள்வது அவசியம் ஆகும்.
சுவாச கோளாறு
உடலில் ஹீமோகுளோபின் அளவுகள் குறையும் போது, காற்றின் அளவும் குறையும். இதனால் தசைகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காது. இந்த சமயத்தில் நடக்கும் போதோ அல்லது மற்ற பணிகளில் ஈடுபடும் போதோ மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.
Also Read: நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு இந்த ஐந்து உணவுகளை அவசியம் சாப்பிடுங்கள்!
அன்றாடம் நடக்கும் போது, படிகளில் ஏறு போதும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் உடலில் இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
தலைவலி
பெண்களுக்கு இரும்பு சத்து குறைபாடு காரணமாக தலைவலி ஏற்படும். இந்த அறிகுறி மிகவும் சாதாரண விஷயம் ஆகும். இதனால் தலைவலிக்கும் இரும்பு சத்து குறைபாடுக்கும் தொடர்பு உள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளளது.
பொதுவாக இரத்த சிவப்பு அணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் தடைப்படும். இதன் காரணமாகவே மூளையில் உள்ள இரத்த நாளங்களில் வீக்கம் ஏற்படும். இதனாலேயே தலைவலி ஏற்படுகிறது.
தலைவலி ஏற்பட பல்வேறு இதர காரணங்களும் இருக்கின்றன. எனினும், அடிக்கடி தலைவலி ஏற்பட்டால் உடலில் இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டு இருக்க வாய்ப்புகள் உள்ளன.
இதய படபடப்பு
இதயத்தில் அடிக்கடி படபடப்பு ஏற்பட்டாலும், உடலில் இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டு இருக்கலாம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இரும்பு சத்து குறைபாடு, அனீமியா மற்றும் இதய கோளாறுகளுக்கு இடையே உள்ள ஒற்றுமை பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் இதற்கு உடலினுள் செல்லும் காற்றின் அளவு சார்ந்து இருக்கலாம்.
இரத்த சிவப்பு அணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் எனும் புரோட்டீன் உடல் முழுக்க ஆக்ஸிஜனை கடத்தும் பணியை மேற்கொள்கிறது. ஹீமோகுளோபின் அளவு உடலில் குறையும் போது , உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல இதயம் கூடுதலாக உழைக்க வேண்டும் . இதன் காரணமாக படபடப்பு மற்றும் இதயம் வழக்கத்தை விட வேகமாக துடிப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.
Also Read: இதயத்தை பத்திரமாக பாத்துக்க இதை மட்டும் செய்தால் போதும்!
தலைமுடி மற்றும் சருமம்
தலைமுடி மற்றும் சரும பாதிப்பும் உடலில் இரும்பு சத்து குறைபாடு ஏற்படுவதை குறிக்கலாம்.
இரும்பு சத்து குறைபாடு ஏற்படும் போது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவுகள் குறையும். இதனால் தலைமுடி வளர்ச்சியை தூண்டுவதற்கு தேவையான ஆக்ஸிஜன் குறையும். தலைமுடி மற்றும் சருமத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை எனில், இவை வறண்டு போகும் வாய்ப்புகள் அதிகம்.
தலைமுடி உதிர்வுக்கு இரும்பு சத்து குறைபாடு முக்கிய காரணியாக உள்ளது. சில ஆய்வுகளில் தலைமுடி உதிர்வுக்கு இரும்பு சத்து குறைபாடும் காரணம் என கூறப்பட்டு உள்ளது.
அன்றாட வாழ்க்கையில் அவ்வப்போது சிறிதளவு தலைமுடி உதிர்தல் ஏற்படுவது வழக்கம் தான். எனினும், அதிகளவு முடி உதிர்வு ஏற்பட்டால் இரும்பு சத்து குறைபாடு உள்ளதை கண்டறிந்து கொள்ள முடியும்.
வீக்கம் மற்றும் புண்
சமயங்களில் வாயினுள் அல்லது வாயை சுற்றி பார்த்தாலே உடலில் இரும்பு சத்து குறைபாடு உள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
நாக்கில் வீக்கம், வழக்கத்தை விட அதிக வெள்ளையாக தெரிவது அல்லது மிகவும் மென்மையாக இருந்தால் இரும்பு சத்து குறைந்துள்ளது என உணர வேண்டும்.
இவை தவிர இரும்பு சத்து குறைந்தால்:
- வாய் வறண்டு போவது
- வாயில் எரிச்சல் ஏற்படுதல்
- வாயின் ஓரங்களில் சிவப்பு நிற வெடிப்பு ஏற்படுதல்
- வாய் அல்சர்
போன்றவை ஏற்படலாம்.
கால்களில் வலி
இரும்பு சத்து குறைபாடு இருந்தால் ஓய்வு எடுக்கும் போது திடீரென கால்களை உடனடியாக அசைக்க தூண்டும் எண்ணம் எழும். சமயங்களில் இது அசவுகரியத்தை ஏற்படுத்தும். இதுதவிர பாதங்களில் அரிப்பு உணர்வை ஏற்படுத்தலாம்.
இரவு நேரங்களில் இந்த உணர்வு அதிகரிக்கும். இதன் காரணமாக நிம்மதியான உறக்கம் கிடைக்காமல் போகும் வாய்ப்புகளும் ஏற்படும். இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்களில் 25 சதவீதம் பேருக்கு இந்த அறிகுறிகள் ஏற்படுகின்றன.
வழக்கமாக மற்றவர்களுடன் ஒப்பிடும் போது இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்களை இந்த பாதிப்பு ஒன்பது மடங்கு அதிகமாக தாக்குகின்றன.
எளிதில் நகம் உடைதல்
இது மிகவும் குறைந்த எண்ணிக்கையில், சிலருக்கு மட்டும் ஏற்படும் பிரச்சினை. முதலில் நகம் பலவீனமாகி எளிதில் உடைந்து போகும் நிலை ஏற்படலாம். நாளடைவில் நகங்கள் கரண்டி வடிவத்திற்கு மாற துவங்கும். எனினும், இந்த பிரச்சினை இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்களில் 5 சதவீதம் பேருக்கு மட்டுமே ஏற்படுகிறது.
வேறு சில அறிகுறிகள்
இரும்பு சத்து குறைபாடு உள்ளதை உணர்த்தும் வேறு சில அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன. எனினும், இவை சிலருக்கு மட்டுமே ஏற்படுக்கூடியவை ஆகும்.
குளிர்ச்சியான கை மற்றும் பாதம்
இரும்பு சத்து குறைபாடு காரணமாக உள்ளங்கை மற்றும் பாதங்கள் எளிதில் குளிர்ந்து போகும் வாய்ப்புகள் உள்ளன. குறைந்த அளவு ஆக்ஸிஜன் கிடைப்பதே இந்த நிலைக்கு முக்கிய காரணம் ஆகும்.
நோய் எதிர்ப்பு சக்தி
இரும்பு சத்து குறையும் போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும் வாய்ப்புகள் உள்ளன.