கணவன் மனைவி இடையே உறவு அருமையாக அமைவதற்கு அவர்களின் தாம்பத்ய உறவு என்பது நன்றாக இருக்க வேண்டியது அவசியம். அதில் சிக்கலும், சிரமும் ஏற்பட்டால் இல்லற வாழ்வில் கஷ்டங்கள் மட்டுமே இருக்கும்.
பல தம்பதிகளின் வாழ்வில் தாம்பத்ய உறவு சலிப்பை ஏற்படுத்துவதற்கு காரணம் உடலுறவில் புதுமைகளை கையாளததே ஆகும். உங்கள் தாம்பத்ய வாழ்க்கை இனிமையாக அமைய கீழே உள்ள அம்சமான ஐடியாக்களை பின்பற்றுங்கள்.
உள்ளாடைகள்:
கணவன் மனைவி இடையே தாம்பத்ய உறவில் அதிக கிளர்ச்சியை ஏற்படுத்தும் சக்தி உள்ளாடைகளுக்கு உண்டு. மோசமான உள்ளாடை தேர்வு கடும் அதிருப்தியையும், தாம்பத்யத்தில் ஈடுபடும் மனநிலையையும் மாற்றி விடும். அதனால், எப்போதும் தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்பு கிளர்ச்சியை தூண்டும் உள்ளாடைகளையும், ஆடைகளையும் தேர்வு செய்து அணியுங்கள்.
டர்ட்டி டாக்:
கணவன் மனைவி இடையே நடைபெறும் தாம்பத்யத்தில் செல்லமான சிணுங்கல்கள், முனங்கல்கள் இருக்க வேண்டும். கணவன் மனைவி இடையே உறவின் போது பேசும் பேச்சுக்கள் அதிகளவு கிளர்ச்சியைத் தூண்டும். இரட்டை அர்த்தங்கள், வெளிப்படைத்தன்மை இன்னும் அதிகளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதிக மூச்சு விடுவதன் மூலமோ அல்லது உங்கள் துணையின் காதுகளில் அந்த மாதிரி விஷயங்களை கிசுகிசுப்பதன் மூலமோ நீங்கள் அதை வேறு கட்டத்திற்கு அழைத்து செல்லலாம். இது உங்கள் மூடை ரொமெண்டிக்காக மாற்றி, உடலுறவில் சிறப்பாக செயல்பட உதவும்.
மயக்கும் நடனம்:
இயந்திரங்களை போல உடலுறவு கொள்ளாமல் மனம் விட்டு பேசி, ஆடிப்பாடி ஒருவருக்கு ஒருவர் தழுவிக்கொள்ள வேண்டும். ஆட்டம், பாட்டத்துடன் தொடங்கி தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் அதன் மகிழ்ச்சியின் எல்லை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது ஆகும்.
வாசனை திரவியங்கள்:
வாசனை திரவியங்களுக்கு உணர்ச்சியை மாற்றும் தன்மை உண்டு. நமது உடலில் வீசும் துர்நாற்றம் துணை நம்மிடம் நெருங்கும்போது ஒரு வித தயக்கத்தை ஏற்படுத்தும். அதனால் நன்றாக வாசனை தரும் திரவியங்களை பயன்படுத்துங்கள். நீங்கள் உடலுறவில் சிறப்பாக செயல்பட உங்களுக்கு உதவும்.
பொசிஷன்கள்:
பல தம்பதிகளின் வாழ்வில் இல்லற வாழ்வு சலிப்பு அடைவதற்கு முக்கிய காரணம் இயந்திரங்களை போல ஒரே முறையில் உறவு கொள்வதுதான். தாம்பத்திய முறையில் இரு மனங்கள் இணைந்து விருப்பப்பட்டு எப்படி வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம். அதற்கு நீங்களும், உங்கள் துணையும் விருப்பப்பட்டால் போதும். புதுமைகளை முயற்சி செய்யும்போது அதில் ஏற்படும் தோல்வி கூட உங்கள் உறவிற்கு மேலும் இன்பத்தை அளிக்கும்.
ALSO READ | முதல்ல இதைப் படிங்க.. உடலுறவு வைத்துக்கொள்ள பெஸ்ட் சீசன் எது..?