இன்று நம் அனைவரது வீட்டிலும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக சிலிண்டர் உள்ளது. சிலிண்டர் விலை விற்கும் சூழலில் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்துவது மிகவும் அவசியம். அது எப்படி சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்துவது?
உணவை சமைப்பது முதல் தண்ணீரை சூடாக்குவது வரை குறைந்த எரிவாயை மட்டுமே நீங்கள் பயன்படுத்த வேண்டும். உங்கள் கேஸ் சிலிண்டரை நீண்ட காலம் இயக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில எளிய குறிப்புகள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
- உணவுகளை நீங்கள் அடிக்கடி சமைக்கும்போது, அதிகளவில் கேஸை பயன்படுத்தி சமைக்க வேண்டியிருக்கும்.
- நீங்கள் அதிகமாக உணவு சமைக்கும்போது, பல சிறிய உணவுகளை சமைப்பதை விட வாயுவை மிகவும் திறமையாகப் பயன்படுத்தலாம். மீதமுள்ள உணவை குளிர்சாதன பெட்டியில் சேமித்து, பின்னர் அவற்றை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடலாம்.
- பிரஷர் குக்கர் பயன்படுத்தி சமைப்பதால் உணவை விரைவில் சமைத்துவிடும். நீங்கள் பிரஷர் குக்கரை பயன்படுத்தியே உணவை சமைக்கலாம். இதனால், குறைந்தளவு கேஸ் மட்டுமே செலவாகும்.
- பிரஷர் குக்கர் அதிக அழுத்தத்தில் உணவை சமைக்க நீராவியைப் பயன்படுத்துகிறது. இதன்மூலம் நீங்கள் குறைந்த நேரத்தில் உணவை எளிதில் சமைக்கலாம். இது எரிவாயுவை சேமித்து, நீண்ட காலம் சிலிண்டர் கேஸ் காலியாகமல் இருக்க உதவும்.
- நீங்கள் பயன்படுத்தும் பாத்திரம் மற்றும் பொருட்களின் அளவுடன் பொருந்தக்கூடிய பர்னரை சிலிண்டர் அடுப்பில் பயன்படுத்த வேண்டும். நீங்கள் சமைக்கும் பாத்திரத்திற்கு ஏற்ப பர்னரை சிறிதாகவும் பெரிதாகவும் பயன்படுத்த வேண்டும்.
- பர்னரில் அடைப்பு போன்று ஏதாவது பிரச்சனை இருந்தால், வெப்பம் சரியாக வெளிவராது. இதனால், உணவு சமைக்க அதிக நேரம் எடுக்கும். அதிகளவு கேஸ் இதனால் பயன்படுத்த வேண்டியிருக்கும். சுத்தமான பர்னரை நீங்கள் பயன்படுத்தும்போது குறைந்த வாயு மட்டுமே செலவாகும். எனவே, பர்னரை நல்ல நிலையில் வைத்திருக்க, அதை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
- சமைக்கும் போது, உங்கள் உணவு முழுவதுமாக சமைப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் பர்னரை அணைக்க வேண்டும். அதில் இருக்கும் மீதமுள்ள வெப்பம் சமையல் செயல்முறையை முடித்து வாயுவைச் சேமிக்கும். இதன் மூலம் சிலிண்டர் கேஸை நீங்கள் சேமிக்கலாம்.
- நீங்கள் சமைக்கும் போது, பானை அல்லது பாத்திரத்தை மூடி வைத்து சமைக்க வேண்டும். இது வெப்பம் மற்றும் நீராவியைப் பிடிக்கும் என்பதால், விரைவில் உங்கள் உணவு வெந்துவிடும். இதில் குறைவான அளவு மட்டுமே கேஸ் செலவாகும்.
மேற்கண்ட முறைகளை பயன்படுத்தி எரிவாயுவை மிச்சப்படுத்துங்கள்.
ALSO READ | வீட்டில் பணம் கொட்ட வேண்டுமா..? அப்போ கண்ணாடியை இந்த இடங்களிலெல்லாம் மாட்டுங்க..!