Thursday, June 1, 2023
HomeLifestyleபெண்களே உஷார்.. அந்தரங்கத்தை படம்பிடிக்கும் ரகசிய கேமராவில் இருந்து தப்பிப்பது எப்படி?

பெண்களே உஷார்.. அந்தரங்கத்தை படம்பிடிக்கும் ரகசிய கேமராவில் இருந்து தப்பிப்பது எப்படி?

தொழில்நுட்பம் இன்றைய காலத்தில் அதிவேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது. இதை பலரும் நல்ல முறையிலும், சிலர் தவறான பாதைகளிலும் பயன்படுத்தி வருகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியை சிலர் பெண்களின் பாதுகாப்புக்கு எதிராக பயன்படுத்தும் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது.

இன்றைய காலத்தில் பெண்களை ரகசியமாக படம்பிடித்து அவர்களது அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் பதிவிடும் தவறான செயலை பல கும்பல்கள் செய்து வருகின்றனர். இதனால், பெண்கள் இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதை கீழே காணலாம்.

சொந்த ஊர்களில் இருந்து வெளியூர்களுக்கு பணிக்கு செல்லும் பெண்கள் தங்கும் அறைகள், துணிக்கடைகளில் உடைகளை மாற்றி சரிபார்க்கும் பெண்கள், விடுதிகளில் தங்கும் பெண்களின் அறைகள், குளியலறைகளில் சிலர் ரகசிய கேமராக்களை பொருத்தி இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.

இதுபோன்ற ரகசிய கேமராக்கள் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

• நீங்கள் தங்கும் அறையில் உள்ள விளக்குகளை அணைத்துவிட வேண்டும்.
• உங்கள் அறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தால் அதில் உள்ள எல்.இ.டி விளக்கு ஒளிரும் என்பதால், இருளில் அது இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்.
• துணிக்கடையில் உடை மாற்றும் அறையில் உள்ள கண்ணாடிகளை பெண்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
• உங்கள் விரலை கண்ணாடியின் மீது வைக்கும் போது, விரலுக்கும், கண்ணாடியில் தோன்றும் பிம்பத்திற்கும் இடையே இடைவெளி இல்லை என்றால் அங்கு ரகசிய கேமரா உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்..
• துணிக்கடையின் உடை மாற்றும் அறைக்குள் நுழைவதற்கு முன்னதாக செல்போனிலிருந்து கால் செய்து பாருங்கள். பின்னர் அந்த அறைக்குள் சென்றவுடன் மீண்டும் கால் செய்து பாருங்கள்.
• பல முறை முயன்றும் கால் போகவில்லை என்றால் கண்டிப்பாக அந்த அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டுள்ளது என்று பொருள்.
• ரகசிய கேமராக்கள் கண்ணாடி இழை கேபிள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். இதனால், உங்கள் செல்போன் சிக்னல் பரிமாற்றங்கள் தடை செய்யப்படுவதால் தான் அழைப்பு செல்லவில்லை.
• ஒருவேளை கால் கனெக்ட் ஆகி திடீரென இரைச்சல் சத்தம் அல்லது ‘கிளிக்’ என்ற சத்தம் கேட்டால் அருகே ரகசிய கேமரா போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் இருக்கிறது என்றும் உணர வேண்டும்
• உங்களுக்கே தெரியாமல் நீங்கள் இருக்கும் இடத்தில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தால் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கொடுக்கப்படும்.
• ரகசிய கேமராக்கள் இருப்பதை கண்டறிய சில கருவிகளும் உள்ளது. அந்த கருவிகள் மூலமாகவும் நாம் கண்டறியலாம்.